ஹதீஸ் அட்டவணை

அல்குர்ஆனை சப்தமிட்டு ஓதுபவர் தர்மத்தை பகிரங்கமாக செய்பவர் போலாவார் மேலும் அல்குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் இரகசியமாக தர்மம் செய்தவர் போலாவார்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'இம்மையில் அவனை இரண்டு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமைநாளில் அவனை அவனுடைய முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'யார் அல்லாஹ்வை இணைவைக்காத நிலையில் சந்திக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். யார் அவனை இணைவைத்த நிலையில் சந்திக்கிறாரோ அவர் நரகில் நுழைவார்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யார் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமை சிரமத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் சிரமத்தில் ஆழ்த்துவான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'இறை பக்தியுள்ள, தன்னிறைவுடன், ஒதுங்கி இருக்கும் அடியானை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நட்சத்திர ஜோதிடக் கலையில் ஒரு பகுதியைக் கற்பவன் சூனியக் கலையில் ஒரு பகுதியைக் கற்றவனாவான், அது அதிகரிக்க இதுவும் அதிகரிக்கும்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) நாண்போன்ற மாலையோ அல்லது வேறு ஏதாவது ஒரு மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்'' எனக் கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒத்துக்கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்' என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களுக்கு குத்பதுல் ஹாஜாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஒரு நபரின்; (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்று விடுங்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நீ ஸாபித் இப்னு கைஸிடம் சென்று, 'நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்க வாசிகளில் ஒருவரே' என்று சொல் என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
(பின்னர் அந்நாளில் அருட்கொடைகள் பற்றி நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்) என்ற வசனம் இறங்கிய போது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
''எனது சமூகத்தின் இறுதியில் சில நபர்கள் தோன்றுவார்கள் அவர்கள் நீங்களோ உங்களின் மூதாதையர்களோ செவிமடுக்காத விடயங்களை (மார்க்கத்தின் பெயரால்) கூறுவார்கள். எனவே உங்களையும் அவர்களையும் நான் எச்சரிக்கிறேன்''
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'எழுதவும்; என் ஆன்மா யாருடைய கையில் இருக்கிறதோ, இந்த வாயின் மூலம் உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளிவருவதில்லை!
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வந்தேன். அப்போது நபியவர்கள் நீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளித்துவருமாறு எனக்குப் பணித்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
மக்களே! நான் இந்த மிம்பரை செய்தது உங்களுக்கு இமாமத் செய்யவும், எனது தொழுகை முறையை கற்றுத்தரவுமே என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் முஅத்தின் கூறுவது போன்று கூறுங்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'தாம் உயிருடன் இருக்கும் போது மறுமையை சந்திப்போரும், சமாதிகளை வழிபாட்டுத் தளங்களாக எடுப்போருமே மக்களில் மிக மோசமானவர்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
எனவும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'உங்களின் மூதாதையரைக் கொண்டு நீங்கள் சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்' என்றார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'காலம் சுருங்காத வரையில் –காலத்தின் பரக்கத் எடுக்கப்படாத வரை- மறுமை நாள் ஏற்படமாட்டாது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'யார் என்மீது (நான் கூறியதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நீங்கள் எங்கள் (மாபெரும்} தலைவர்"என்று கூறினோம், அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வே மாபெரும் தலைவன் ஆவான். அப்போது நாம் நீங்கள் எங்களில் அந்தஸ்த்தால் உயர்ந்தவராகவும் அள்ளி வழங்கும் வள்ளலாகவும் இருக்கிறீர்கள் என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் அல்லது சிலதை கூறுங்கள் உங்களை ஷைத்தான் எல்லை மீறிப்புகழ்வதற்கு இட்டுச் செல்லாதிருக்கட்டும்.' எனக் குறிப்பிட்டார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி (ஸல்) அவர்கள் ''என் தந்தையின் சகோதரரே! 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)' என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்ஸாரிகள் குறித்து இவ்வாறு கூறினார்கள் "அவர்களை உண்மை இறைவிசுவாசியைத் தவிர வேறு யாரும் நேசம் கொள்ளவும் மாட்டார். நயவஞ்சகனைத் தவிர வேறு யாரும் அவர்களை வெறுக்கவும் மாட்டார்.யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று வுழூச் செய்துகாட்டினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றி, ரமழானில் நோன்பையும் நோற்று, ஹலாலை ஹலாலாக்கி,
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
பெருந்துடக்குடன் இருந்த நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை (துணி கட்டிக்கொள்ளுமாறு) பணிப்பார்கள். அவ்வாறே நான் கீழாடை அணிந்து கொள்வேன். அப்போது அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுக்கும் (நிலை ஏற்படும்)வரை மக்களுடன் போர் புரியும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளார்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால், மக்களில் பலர்; ஏனைய மனிதர்களின் உயிர்க்ளுக்கும் உடமைகளுக்கு உரிமை கோரத் தொடங்குவார்கள். எனவே உரிமை கொண்டாடும் வாதி அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதனை மறுப்பவர் -பிரதிவாதி- சத்தியம் செய்ய வேண்டும்.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நீ வெட்கப்படாவிட்டால், நினைத்தை செய்துகொள்' என்பது, முந்திய நபித்துவ வாசகங்களில் இருந்து மக்கள் கற்றுக்கொண்ட ஒன்றாகும்.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நீ இவ்வுலகில் ஒரு பரதேசியைப் போன்று, அல்லது ஒரு வழிப்போக்கனைப் போன்று இருந்துகொள்.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உனது நாவு எப்போதும் அல்லாஹ்வின் திக்ரினால் ஈரமடைந்து இருக்கட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நன்மை என்பது நற்குணமாகும். பாவம் என்பது உனது உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தும். மக்கள் அதைக் காண்பதை நீ வெறுப்பாய்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதற்கேற்பவே கூலி கிடைக்கிறது 'நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவரது படைப்பும் தனது தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் விந்துவாக ஒருங்கிணைக்கப்படுகிறது எமது மார்க்கத்தில் (தீனில்) அதில் இல்லாதவற்றை புதிதாக யார் உருவாக்கிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும் நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதனை முடியுமானளவு செய்யுங்கள் அல்லாஹ் ' உங்களுக்கும் தர்மம் செய்யக் கூடியவற்றை அருளவில்லையா?" ஒவ்வொரு 'தஸ்பீஹும்'; (ஸுப்ஹானல்லாஹ்) ஒரு தர்மமாகும் (ஸதகாவாகும் ). ஒவ்வொரு தக்பீரும்' (அல்லாஹு அக்பர்) ஒரு ஸதகாவாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) ஒரு ஸதகாவாகும்.ஒரு நன்மையை ஏவுவதும் ஸதகா. ஒரு தீமையை தடுப்பதும் ஸதகா. உங்கள் மனைவியரோடு உடலுறவுகொள்வதும் ஸதகா
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ் தடைசெய்த இந்த அசுத்தத்தைத் தவிர்த்து விடுங்கள். யார் இதைச் செய்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் மறைவால் தன்னை மறைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் தவ்பா செய்யட்டும். ஏனெனில், யார் தனது பாவங்களை நமக்கு வெளிப்படுத்துகிறாரோ, அவருக்கு எதிராக நாம் அல்லாஹ்வின் வேதத்தை நிறைவேற்றுவோம்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'எல்லாம் வல்ல அல்லாஹ் சில மார்க்கக் கடமைகளை விதித்திருக்கின்றான். ஆகவே அவைகளை வீணடிக்காதீர்கள்; அவன் சில எல்லைகளை நிர்ணயித்திருக்கின்றான். ஆகவே அவற்றைக் கடந்து செல்லாதீர்கள். அவன் நமக்கு சிலவற்றை தடை செய்திருக்கின்றான். ஆகவே அவற்றை மீறிச்செல்லாதீர்கள்; சில விஷயங்களில் மறதியாக அன்றி,உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக அவன் மௌனமாக இருக்கின்றான். ஆகவே அவற்றைக் குறித்து தேட வேண்டாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் செவிமடுத்ததாக உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்களின் மகன் அபூஅப்துர் ரஹ்மான் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள் :||'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது' 'உமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றை விட்டு விட்டு அதற்குப் பதிலாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை எடுத்துக் கொள்;' அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபியவர்களின் பணியாளராகிய அபூ ஹம்ஸா அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :||'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்' ''நிச்சயமாக அல்லாஹ் எல்லா விடயங்களையும் மிகவும் அழகிய முறையில் செய்ய வேணடும் என விதித்துள்ளான் சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று கூறி பின்வருமாறு அறிவுரை கூறினார்கள் : அல்லாஹ்வை நீ மனதிற் கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை மனதிற் கொள். நீ அவனை உன் முன் காண்பாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுனால் அல்லாஹ்விடமே உதவிதேடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக நுஃமான் பின் பஷீர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவித்துள்ளார்கள்:||ஹலாலும் (ஆகுமானவைகள்) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்) தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே (இவை ஹலாலானவையா?, அல்லது ஹராமானவையா? என்ற) சந்தேகத்திற்கிடமான விடயங்களுமுண்டு. அவற்றை மக்களில் அதிகமானோர் அறியாதிருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமான வற்றைத் தவிர்ந்து கொண்டவர் தனது மார்க்கத்தையும், மானத்தையும் பாதுகாத்துக் கொண்டார். யார் சந்தேகமான விடயத்தில் விழுந்து விடுகிறாரோ அவர்; ஹராத்தில் விழுந்து விட்டவராவார். இது தனது மந்தையை அனுமதிக்கப்படாத ஒரு வேலிக்கருகாமையில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடையனின் செயற்பாட்டை ஒத்ததாகும். அந்தக் கால் நடைகள் அவை தடுக்கப்பட்ட அப்பகுதிக்குள் சென்று மேய்ந்து விடக் கூடிய சாத்தியம் எப்போதும் இருக்கிறது. ஆக, அதிகாரம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அவருக்குரிய ஒரு பாதுகாப்பு எல்லை உண்டு. அல்லாஹ்வின் பாதுகாப்பு எல்லை, அவன் அனுமதிக்காத(ஹராமான) காரியங்களாகும். அறிந்துகொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால் உடல் முழுவதும் சீராகி விடுகின்றது. அது கெட்டு விடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது. அந்த சதைப் பகுதி இதயமாகும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ருகையா தமீம் பின் அவ்ஸ் அத்தாரீ ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :||'மார்க்கம் என்பது நலன் நாடுவதாகும்;.' என்று நபியவர்கள் கூறியபோது, யாருக்கு நலன் நாட வேண்டும்? என நாம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள்: அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்திற்கும், அவனது தூதரிற்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், இன்னும் முஸ்லிம் பொதுமக்களுக்கும் நலன் நாடுவதாகும்' எனக் கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :||'நிச்சயமாக அல்லாஹ் தூயவன், அவன் தூயவைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் தனது தூதர்களிடம் எதைச் செய்யும்படி கட்டளையிட்டானோ, அதையே நம்பிக்கையாளர்களையும் (முஃமின்களையும்) செய்யும்படி கட்டளையிட்டுள்ளான்." 'தூதர்களே! தூயவைகளிலிருந்தே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்' என்று கூறிய எல்லாம் வல்ல அல்லாஹ் ''நம்பிக்கையாளர்களே! நான் உங்களுக்குத் தந்துள்ளவற்றில் தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்'' என்றும் கூறியுள்ளான். பின்னர் பெருமானர் (ஸல்) அவர்கள் அதிக தூரம் பயணம் செய்த ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். தலைவிரிகோலமாக, மாசு படிந்தவராக அவர் தனது கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தி ' எனது இரட்டசகனே! எனது இரட்சகனே! என கதறுகிறார். ஆனால் அவர் தனது உணவைப் பெறும் வழி தடுக்கப்பட்டதாக (ஹராமானதாக) இருக்கின்றது, அவர் அருந்தும் பானம் தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது உடை தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது மொத்த வாழ்க்கையே ஹராமான வழியில் தான் இருக்கின்றது. இந்த நிலையில் அவர் எவ்வாறு இறைவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்க முடியும்! அபூமஸ்ஊத் உக்பா இப்னு அம்ர் அல்-அன்ஸாரீ அல்-பத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நவின்றதாக கூறுகின்றார்கள் :||'நீ வெட்கப்படாவிட்டால், நினைத்தை செய்துகொள்' என்பது, முந்திய நபித்துவ வாசகங்களில் இருந்து மக்கள் கற்றுக்கொண்ட ஒன்றாகும்.' அபூ அம்ரு (இவருது புனைப்பெயர் அபூ அம்ரா என்றும் கூறப்பட்டுள்ளது) ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :||நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள் 'நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றி, ரமழானில் நோன்பையும் நோற்று, ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்குகின்றேன் சுத்தம் ஈமானின் பாதியாகும். 'அல்-ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்பது மீஸானின் நன்மையின் தட்டை நிறைக்கின்றது. 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் குறைகளுக்கு அப்பாற்பட்டவன்) 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அலல்hஹ்வுக்கே) ஆகிய இரண்டுமோ அல்லது ஒவ்வொன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:||'மனிதர்களின் ஒவ்வொரு மூட்டுக்கும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தர்மத்தை செய்தாக வேண்டும். சூரியன் உதயமாகும் ஒவ்வொரு நாளும் இரு மனிதர்களுக்கிடையில் நீதி செலுத்துதல் ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய பொருட்களை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். தீங்கு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்' இறையச்சத்தையும், ஒரு அடிமையே உங்களது தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு முழுமையாகக் கட்டுப்படுவதையும் நான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன். நிச்சயமாக உங்களில் அதிக நாட்கள் வாழ்பவர்கள் அதிக கருத்துவேறுபாடுகளை சந்திப்பீர்கள். ஆகவே நீங்கள் என்னுடைய நடைமுறைகளையே பின்பற்றுங்கள்.அதுபோலவே நல்வழிநடந்த கலீபாக்களின் நடைமுறைகளையும் பின்பற்றுங்கள் 'நீங்கள் மிகவும் பெரிய ஒரு விடயம் குறித்து வினவி இருக்கின்றீர்கள். இருந்தாலும் அல்லாஹ் யாருக்கு அதனை இலகுவாக்கி வைத்திருக்கின்றானோ அது அவர்களுக்கு மிகவும் இலகுவானதாக இருக்கும் ''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது'' 'நிச்சயமாகஅல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதி, பின்னர் அதனை விளக்கிக் கூறினான் 'நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான் : என்னுடைய நெருங்கிய அடியான் ஒருவரை யார் எதிர்த்து பகைமை பாராட்டுகின்றானோ அவனோடு நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனது அடியான் என்னை நெருங்குவதற்கு அவன் மீது நான் கடமையாக்கியவற்றை விட எனக்கு விருப்பத்திற்குரியவை வேறு ஏதுமில்லை 'நான் கொண்டு வந்தவற்றுக்கு (இறைத்தூதுக்கு) ஏற்ப தனது மனோஇச்சை (கட்டுப்பட்டதாக) மாறும் வரை உங்களில் எவரும் உண்மையாக நம்பிக்கை கொண்டவராக மாட்டார்' 'போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்' நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :||' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால், மக்களில் பலர்; ஏனைய மனிதர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உரிமை கோரத் தொடங்குவார்கள். எனவே உரிமை கொண்டாடும் வாதி அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதனை மறுப்பவர் -பிரதிவாதி- சத்தியம் செய்ய வேண்டும்.' அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:||"நான்கு குணங்கள் எவனிடம் உள்ளனவோ அவன் தெளிவான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் உள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வதும், பேசும் போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை துரோகம் செய்வதும், வழக்காடினால் நேர்மை தவறுவதும்தான் அவை (நான்கும்) ஆகும் 'நீங்கள் உண்மையான முறையில் இறைவனை நம்பி அவனை சார்ந்திருந்தால், (தவக்குல் வைத்தால்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூண்டிற்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று உங்களுக்கும் உணவளிப்பான் நன்மை என்பது நற்குணமாகும், தீமையென்பது உனது மனதில் உருத்தலை ஏற்படுத்தி, மக்கள் அதனை -பார்ப்பதை –கண்டுககொள்வதை நீ வெறுப்பதாகும்.' உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் திளைத்தவாறு இருக்கட்டும் 'நிச்சயமாக அல்லாஹ் என் சமூகத்தாரிடத்தில்; தவறுதலாக ஏற்படக் கூடியதையும் மறதியாக ஏற்படக்கூடியதையும் இன்னும் நிர்பந்தமாக நிகழக்கூடிவற்றையும் எனக்காக மன்னித்து விடுகிறான்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அதற்கு நபியவர்கள் 'உலக வாழ்க்கையில் பற்றற்றவராக இருங்கள், அல்லாஹ் உம்மை நேசிப்பான். மக்களிடம் இருப்பவற்றில் ஆசைகொள்ளாதீர்கள், அவர்கள் உம்மை நேசிப்பார்கள்.' எனப்பதிலளித்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கத் தடை விதிக்கப்பட்டவர்கள், பால்குடி உறவாலும் தடை விதிக்கப்படுவர்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஒரு முஸ்லிம் தனக்கு சம்பந்தமில்லாதவைகளை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஆதமுடைய மகன் நிரப்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவனின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது