عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رضي الله عنه قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشَدَّ حَيَاءً مِنَ العَذْرَاءِ فِي خِدْرِهَا، فَإِذَا رَأَى شَيْئًا يَكْرَهُهُ عَرَفْنَاهُ فِي وَجْهِهِ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6102]
المزيــد ...
அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். தாம் விரும்பாத ஒன்றை அவர்கள் பார்த்து விட்டால், அந்த வெறுப்பை அவர்களின் முகத்திலிருந்தே நாங்கள் அறிந்துகொள்வோம்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 6102]
வீட்டில் தன்னை மறைத்துக்கொண்டு அடக்கமாக இருக்கும் திருமணம் முடிக்காத ஆண்களுடன் உறவு கொள்ளாத கண்ணிப்பெண்ணைவிடவும் மிகவும் நாணமிக்கவராக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இருந்தார்கள் என்பதை அபூஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நபியவர்கள் ஏதாவதொன்றை வெறுத்தால் அவரின் முகம் உடனடியாக மாறிவிடும். அவர் யாருடனும் பேசமாட்டார் இம்முக மாற்றம் அவர்களின் நாணத்தின் உச்சநிலையை காட்டும். மாறாக நபியவர்களின் அதிருப்த்தியை அவர்களின் முகத்திலிருந்தே ஸஹாபாக்கள் புரிந்துகொள்வார்கள்.