عن أبي هريرة رضي الله عنه قال:
كان رسولُ الله صلى الله عليه وسلم إذا عَطَس وضَعَ يَدَه -أو ثوبَهُ- على فيهِ، وخَفَضَ -أو غضَّ- بها صوتَهُ.
[صحيح] - [رواه أبو داود والترمذي وأحمد] - [سنن أبي داود: 5029]
المزيــد ...
அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் வாயின் மீது வைத்து சப்தத்தை குறைத்துக்கொள்பவராக இருந்தார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [رواه أبو داود والترمذي وأحمد] - [سنن أبي داود - 5029]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மும் போது பின்வரும் விடயங்களை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள் :
முதலாவது: வாயிலிருந்தோ அல்லது தனது மூக்குத்துவராத்திலிருந்தோ தனக்கு அருகாமையில் உள்ளவரை தொந்தரவு படுத்துவிதமாக ஏதாவது வெளிவராதாவாறு தனது கையை அல்லது தனது ஆடையை வாயின் மீது வைத்துக்கொள்வார்கள்.
இரண்டாவது: சப்பதம் உயராது குறைத்துக் கொள்வார்கள்.