عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال:
«إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللهِ الْأَلَدُّ الْخَصِمُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2457]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் :
'மனிதர்களில் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் (அசத்தியத்தில்;) கடுமையாக சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 2457]
மனிதர்களில் சத்தியத்திற்கு அடிபணியாது எப்போதும் அதிகமாக குதர்க்கம் புரிந்து கொண்டிருப்பவனையும், தர்கத்தினால் தன்னை பாதுகாத்துக்கொள்ள முயல்பவனையும், அல்லது சத்தியத்தியத்திற்காக வாதாடி தனது வாதத்தில் எல்லை மீறிச்செல்பனையும், அறிவின்றி குதர்க்கத்தில் ஈடுபடுவனையும் அல்லாஹ் வெறுப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.