عن سَمُرة بن جُنْدَب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «أحب الكلام إلى الله أربع لا يَضُرُّك بِأَيِّهِنَّ بدأت: سُبْحَانَ الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) கூறுகின்றார்கள் : ""ஸுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), "அல்ஹம்து லில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), "லாஇலாஹ இல்லல்லாஹு" (உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை), "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகப்பெரியவன்) ஆகிய நான்கு வாசகங்களும் அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியவைகளாகும். இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் பாதகம் எதுவுமில்லை".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

இந்த நான்கு வாசகங்களும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவை என்பதற்கு இந்த ஹதீஸ்.ஆதாரமாக விளங்குகின்றது மேலும் அவை மனிதன் பேசும் வாசகங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவையாகும்.ஏனெனில் இவை அல்லாஹ்வை தூய்மைப்படுத்தல் அவனுக்குக் கட்டாயம் இருக்க வேண்டிய அவனின் பண்புகளை எடுத்துக் கூறல் அவனை ஏகத்துவப்படுத்தி, அவனைப் பெருமைப் படுத்தல் எனும் மகத்தான விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது. மேலும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ளது போன்று அதன் சிறப்பினையும், அதன் நன்மைகளையும் அடையும் பொருட்டு அவற்றைக் கிரமமாக சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்பதுவும் இதிலிருந்து தெளிவாகின்றது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்விற்கு நேசம் எனும் பண்பு உள்ளது, அவன் நற்செயல்களை நேசிக்கின்றான்.
  2. ஏனைய வாசங்களை விட இந்த நான்கு வாசகங்களின் சிறப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது, அவை அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதாகும்.
  3. இந்த நான்கு வாசகங்களையும் தொடர்ந்து கூற ஊக்குவித்தல், ஏனெனில் அல்லாஹ் ஒன்றை விரும்புகின்றான் என்றால் அடியான் அதனைப் பற்றி, பேணி வர வேண்டும்.
  4. "இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் பாதகம் எதுவுமில்லை" எனும் வாசகத்தின் மூலம் இந்த மார்க்கம் மக்களுக்கு இலகுபடுத்திக் கொடுப்பதை உணரலாம்.
மேலதிக விபரங்களுக்கு