عن خولة الأنصارية رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم : «إن رجالاً يَتَخَوَّضُون في مال الله بغير حق، فلهم النار يوم القيامة».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கவ்லா அல்அன்ஸாரிய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் (அநியாயமாகப் பங்கீடு செய்து) கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

முஸ்லிம்களின் உடமைகளைத் தவறான முறையில் பயன்படுத்தும் சில மனிதர்களை நபியவர்கள் கூறி, அவர்கள் முறையற்ற விதத்தில் சொத்துக்களை சுரண்டுகின்றனர் என்பதைக் கூறுகின்றார்கள். அநாதைகளின் சொத்துக்கள், வக்பு சொத்துக்களை தகுதியற்றவர்கள் சுரண்டுதல், அமானிதங்களை மறுத்தல், பொது நிதியிலிருந்து அனுமதியோ, தகுதியோ இல்லாமல் எடுத்தல் போன்றன இதில் உள்ளடங்குகின்றன. இவர்களுக்குரிய கூலி நரகம்தான் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அனுமதிக்கப்பட்ட முறையிலன்றி பொருளீட்டல் செய்வது ஹராமாகும். ஹராமான சம்பாத்தியம் நியாயமின்றி கையாள்வதையும் உள்ளடங்குகின்றது.
  2. முஸ்லிம்களுடையவும், தலைவர்களுடையவும் கைகளில் புரளும் பணம் அல்லாஹ்வுக்குரியதாகும், மார்க்க சட்டபூர்வமான வழிகளில் அதை செலவிடுவதற்காக அல்லாஹ் அவர்களை அதில் பிரதிநிதிகளாக ஆக்கியுள்ளான். அதனை முறையற்ற விதத்தில் கையாள்தல் ஹராமாகும். இது ஆட்சித் தலைமைகள், ஏனைய முஸ்லிம்கள் அனைவருக்குமான பொதுச் சட்டமாகும்.
மேலதிக விபரங்களுக்கு