عن أبي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ رَدَّ اللَّهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ الْقِيَامَةِ».
[صحيح] - [رواه الترمذي وأحمد]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூத்தர்தா (ரலி) கூறுகின்றார்கள் : "எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே பாதுகாக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில்(நரக) நெருப்பிலிருந்து காக்கிறான்".
ஸஹீஹானது-சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

தனது முஸ்லிம் சகோதரனுடைய மானத்தைக் காத்தவருக்குள்ள சிறப்பு இந்நபிமொழியில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சபையிலுள்ள ஒருவர் அவரைப் பற்றிப் புறம் பேசினால் புறம் பேசியவரை வாயடைக்கச் செய்து, அப்பாவத்தைத் தடுத்து, உமது முஸ்லிம் சகோதரருடைய மானத்தைக் காப்பது உம்மீது கடமையாகும். அவ்வாறே விட்டுவிட்டால் அது உமது சகோதரருக்குச் செய்யும் துரோகமாகக் கருதப்படும். குறிப்பாக அந்தச் சகோதரர் அச்சபையில் இல்லாத சமயத்தில் அவரது மானத்தைக் காப்பது கடமை என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அறிவிக்கும் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது : "யார் தனது சகோதரர் இல்லாத சமயத்தில் அவருடைய மானத்தைக் காக்கின்றாரோ அவரை நரகில் இருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகும்". ஆதாரம் : அஹ்மத், அஷ்ஷேக் அல்பானீ இதனை "ஸஹீஹ்" எனக் கூறியுள்ளார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. புறம் பேசப்பட்ட உமது முஸ்லிம் சகோதரர் சபையில் இல்லாத பட்சத்தில் அவரைப் பாதுகாக்கும் போதுதான் இந்த நன்மை கிடைக்கின்றது.
  2. செயலுக்கேற்ற கூலி கிடைக்கும், தனது சகோதரருடைய மானத்தைக் காற்றவரை அல்லாஹ் நரகிலிருந்து காக்கின்றான்.
  3. மறுமை, நரகம் ஆகியன நிச்சயமாக உண்டு என்பதை இந்நபிமொழியும் உறுதிப்படுத்துகின்றது.
மேலதிக விபரங்களுக்கு