+ -

عن شداد بن أوس رضي الله عنه قال: ثِنْتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ اللهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، فَلْيُرِحْ ذَبِيحَتَهُ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1955]
المزيــد ...

ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து இரண்டு விடயங்களை மனனமிட்டிருந்தேன் எனக் கூறினார்கள் :
நிச்சயமாக அல்லாஹ், செய்யும் காரியங்கள் அனைத்தையும் சிறப்பாகவும் கச்சிதமாகவும் செய்யுமாறு பணித்திருக்கின்றான். ஆகவே நீங்கள் கொலை செய்தால், அழகிய முறையில் கொல்லுங்கள். நீங்கள் அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். எனவே உங்களில் ஒருவர்; தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும். அதன் மூலம் அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்குங்கள்; (குறையுங்கள்).

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 1955]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் எல்லா விவகாரங்களிலும் இஹ்ஸானைக் கடைப்பிடிக்குமாறு எமக்கு அறியத்தருகிறார்கள். இஹ்ஸான் என்பது வணக்க வழிபாடுகளிலும், நன்மையான காரியங்களை செய்வதிலும், படைப்புகளுக்கு நோவினை ஏற்படுவதை தடுப்பதிலும் இறை அவதானம் எனும் உணர்வோடு எப்போதும் இருத்தலையே குறிக்கும். இந்த வகையில்; இஹ்ஸான் என்பது கொலை செய்தல், பலியிடுதல் போன்ற விவகாரங்களிலும் காணப்படும். அது நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் மேற்கொள்ளல் என்ற கருத்தை குறிக்கும்.
பலிக்குப்பலி தண்டனை நிறைவேற்றும் போது குறித்த நபரை கொலை செய்வதில் இஹ்ஸானை; கடைப்பிடித்தல் என்பது: கொலைசெய்யப்படு பவரின் உயிர் மிக இலகுவான முறையில் விரைவாகவும், சுகமாகவும் பிரிவதற்கு வழிசெய்தல் என்பதைக் குறிக்கும்.
ஷரீஆ முறைப்படி அறுப்பதில் இஹ்ஸான் பேணல் என்பதன் அர்த்தம் அறுவையின் போது மிருகத்துடன் நலினமாக நடப்பதாகும். அதாவது அறுக்கும் ஆயுதத்தை கூர்மையாக்குதல், அறுவை மிருகத்தின் முன் அது பார்த்துக் கொண்டிருக்கை யில் ஆயுதத்தை கூராக்காதிருத்தல், இன்னொரு மிருகம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அதனை அறுக்காது இருத்தல்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада Озарӣ الأوزبكية الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்வின் கருணையும் அடியார்களுடனான அவனின் மென்மையும்.
  2. கொலை செய்தல்,மிருகங்களை அறுத்தல் போன்றவற்றில் இஹ்ஸானைக் கடைப்பிடித்தல் ஷரீஆ அங்கீகரித்த முறையில் இருக்க வேண்டும்.
  3. இந்த மார்க்கம் அனைத்து நலவுகளையும் உள்ளடக்கியுள்ள பரிபூரண மார்க்கமாகும், பிராணிகளுக்கு இரக்கம் காட்டுதல், அவற்றுடன் மென்மையாக நடந்து கொள்ளல் என்பனவும் இதனைச் சார்ந்ததுதான்.
  4. மனிதனை கொலை செய்ததன் பின் சித்திரவதை செய்வது தடுக்கப்பட்டிருத்தல்.
  5. மிருகங்களை வதைசெய்யும் எல்லா விடயங்களும் தடுக்கப்பட்டிருத்தல்.
மேலதிக விபரங்களுக்கு