عن ابن عباس رضي الله عنهما
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ: قَالَ: «إِنَّ اللهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ، ثُمَّ بَيَّنَ ذَلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6491]
المزيــد ...
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூஅன்ஹூமா கூறுகிறார்கள் :
அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அறிவிக்கிறார்கள் : "அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனதில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தா விட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு தீமையையே அல்லாஹ் எழுதுகிறான்".
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 6491]
அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் நிர்ணயித்து அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்பதை இரு மலக்குகளுக்கும் தெளிவுபடுத்திய விடயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஹதீஸில் விவரிக்கிறார்கள் :
ஆகவே யார் நன்மை செய்ய விரும்பி அதனை செய்வதென உறுதிகொண்டு செய்யாவிட்டாலும் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. அவ்வாறு அதனை செய்துவிட்டால் அவருக்கு பத்திலிருந்து எழுநூறு மடங்காகவும் அதைவிட பல மடங்கு அதிகமாகவும் நன்மைகளை எழுதிவிடுகின்றான். இவ்வாறு நன்மைகள் பல மடங்காக அதிகரிப்பதென்பது அவரின் மனத்தூய்மை மற்றும் பிறருக்கு நன்மை விளைதல் என்ற அடிப்படையிலாகும்.
யார் தீமையொன்றை செய்ய நாடி அதனை செய்வதற்கு உறுதிகொண்டும் பின்னர் அல்லாஹ்வுக்காக அதனை விட்டு விட்டால் அதற்காக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. அதனை அவர் வேறு விடயங்களில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டதனால் அந்தத் தீமையை செய்வதற்கான எந்த காரியங்களையும் செய்யாதிருந்தால் அதற்காக அவருக்கு எதுவும் எழுப்படமாட்டாது. அவர் இயலாமையின் காரணமாக அதனை செய்யவதை விட்டுவிட்டால் அவரின் எண்ணத்திற்கான கூலி எழுதப்படுகிறது. அவ்வாறு நினைத்த அந்தத் தீமையை செய்துவிட்டால் அவருக்கு ஒரு தீமை எழுதப்படும்.