عن أبي هريرة رضي الله عنه مرفوعًا: «إِنَّ الله -تَعَالى- يَغَارُ، وغَيرَةُ الله -تَعَالَى-، أَنْ يَأْتِيَ المَرء ما حرَّم الله عليه».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

அல்லாஹ் தான் ஹராமாக்கியவற்றின் மீது ரோசப்படுகின்றான், தனது வரம்புகள் மீறப்படுவதை வெறுக்கின்றான் என்பதை இந்நபிமொழி தெளிவுபடுத்துகின்றது. விபச்சாரமும் இதில் ஒன்றாகும். இது மிக மோசமான கீழ்த்தரமான ஒரு செயலாகும். அதனால்தான் அல்லாஹ் தனது அடியார்கள் மீது விபச்சாரம், மற்றும் அதன் அனைத்து வழிகளையும் தடைசெய்துள்ளான். ஓர் அடியான் விபச்சாரத்தில் ஈடுபட்டால் ஏனைய பாவங்களுக்காக ரோசப்படுவதை விடக் கடுமையாகப் பன்மடங்கு இதற்காக ரோசப்படுகின்றான், அது போன்றுதான் ஒரு பால் புணர்ச்சியும். இது மிக மிகக் கொடூரமானதாகும், இதனால்தான் விபச்சாரத்தை விடக் கொடிய பாவமாக அல்லாஹ் அதனை ஆக்கியுள்ளான். அது போலவே திருட்டு, மது அருந்துதல் மற்றும் அனைத்து ஹராமானவைகள் மீதும் அல்லாஹ் ரோசப்படுகின்றான். இருப்பினும் பாவத்தின் கொடூரம், அதனால் ஏற்படும் விபரீதத்திற்கேற்ப சில பாவங்களை விட சில பாவங்கள் மீதான ரோசம் கடுமையாக இருக்கின்றது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தடுக்கப்பட்ட பாவங்களை விட்டும் தூர விலகி நிற்றல் அவசியமாகும், ஏனெனில் இவை அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்துகின்றது.
  2. அல்லாஹ்வின் கண்ணியத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவாறு அவன் ரோசப்படுகின்றான்.
  3. அல்லாஹ்வின் தடைகள் மீறப்படும் போது அவனது கோபம், தண்டனையை அஞ்சி அவதானமாக செயற்படல்.
மேலதிக விபரங்களுக்கு