عن أبي موسى رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«إِنَّ اللهَ لَيُمْلِي لِلظَّالِمِ، حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ» قَالَ: ثُمَّ قَرَأَ: «{وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ}[هود: 102]»
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 4686]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :
'நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனுக்கு அவகாசம் வழங்கிக்கொண்டிருப்பான், ஆனால் அவனை தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் அவனை விடவும் மாட்டான்' என்று நபியவர்கள் கூறிவிட்டு, ஸூறா ஹூதின் 102 ம்; வசனத்தை ஒதினார்கள். ''மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை உம் இரட்சகன்; தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவும்; மிகக் கடினாமானதாகவும் இருக்கும்''
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 4686]
இணைவைப்பு மற்றும் பாவகாரியங்கள் ஆகியவற்றின் மூலம் அநியாயத்தில் ஈடுபட்டு அத்துமீறி நடப்பதையும், மக்களின் உரிமைகளில் அக்கிரமம் செய்து நடப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் எச்சரிக்கிறார்கள். என்றாலும் இவ்வாறான ஒருவருக்கு அல்லாஹ் அவகாசமளித்து தண்டனை வழங்குவதைப் பிற்படுத்தி அவசரமாக தண்டிக்காது ஆயுளையும் நீடித்து வைக்கிறான். இவ்வாறான நிலையில் இருந்து தனது அக்கிரமங்களுக்கு தௌபா –பாவமீட்சி – கோராது இருந்தால் அவனை அவனது அக்கிரமத்திலும் அநியாயத்திலும் தொடர்ந்தும் இருக்கா வண்ணம் தண்டிப்பதுடன்; ஒரு போதும் அவனை விட்டுவிடமாட்டான்.
பின்னர் ஸூறா ஹூதின் 102 ம்; வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒதினார்கள் ''மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை உம் இரட்சகன்; தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவும்; மிகக் கடினாமானதாகவும் இருக்கும்''.