عن أبي هريرة رضي الله عنه : أن رسول الله صلى الله عليه وسلم قال: «ينزلُ ربُّنا تبارك وتعالى كلَّ ليلةٍ إلى السماء الدنيا، حين يبقى ثُلُثُ الليل الآخرُ يقول: «مَن يَدْعُوني، فأستجيبَ له؟ مَن يسألني فأعطيَه؟ مَن يستغفرني فأغفرَ له؟».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள் : "நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

அல்லாஹ் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான். அதாவது இந்நேரத்தில் அடியார்கள் தன்னிடம் பிரார்த்திக்குமாறு வேண்டி, ஊக்குவிக்கின்றான். அவனை அழைத்தவருக்கு பதிலளிக்கின்றான். தன்னிடம் தேவைகளைக் கேட்குமாறு வேண்டுகின்றான், கேட்பவருக்கு அவன் கொடுக்கின்றான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோருமாறு வேண்டுகின்றான். அவன் தனது முஃமினான அடியார்களை மன்னிக்கின்றான். இங்கு வேண்டுதல் என்பது ஊக்குவிப்பைக் குறிக்கின்றது. இங்கு இறங்குதல் என்பது அல்லாஹ்வின் கண்ணியத்திற்கும், பரிபூரணத்துவத்திற்கும் தகுந்தவாறு யதார்த்தமாகவே நடக்கின்றது, அது படைப்பினங்கள் இறங்குவதற்கு ஒப்பாக மாட்டாது. அல்லாஹ்வின் ரஹ்மத், அல்லது அவனது மலக்குகள்தான் இறங்குகின்றனர் என மாற்றுக் கருத்துக் கொடுக்க முடியாது. மாறாக அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் கொள்கைப் படி இந்த இறங்குதல் என்ற பண்பை திரிபு படுத்தாமல், மறுக்காமல், உவமைப் படுத்தாமல், வடிவம் கொடுக்காமல், அவனது கண்ணியத்திற்குத் தகுந்தவாறு நாம் ஈமான் கொள்வது அவசியமாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ் இரவின் மூன்றிலொன்றில் இறுதி பகுதிஇருக்கும் போது கீழ்வானிற்கு அவனது கண்ணியத்திற்கு ஏற்றவாறு இறங்குகின்றான் என்பதை திரிபு படுத்தாமல், மறுக்காமல், உவமைப் படுத்தாமல், வடிவம் கொடுக்காமல் ஈமான் கொள்ள வேண்டும்.
  2. இரவின் மூன்றிலொன்றில் இறுதி பகுதி பிரார்த்தனை ஏற்கப்படும் நேரங்களில் உள்ளதாகும்.
  3. இந்த நபிமொழியை செவியேற்கும் போது பிரார்த்தனை ஏற்கப்படும் நேரங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் கொள்பவனாக இருப்பது அவசியமாகும்.
மேலதிக விபரங்களுக்கு