عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «إنَّ الله لا ينْظُرُ إِلى أجْسَامِكُمْ، ولا إِلى صُوَرِكمْ، وَلَكن ينْظُرُ إلى قُلُوبِكمْ وأعمالكم».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'நிச்சயமாக அல்லாஹ் உங்களது தோற்றங்களையோ, செல்வங்களையோ பார்க்க மாட்டான், இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.'
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2564]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் அல்லாஹ் அடியார்களின் தோற்றமானது, அழகானதா, அல்லது அசிங்கமானதா? அவர்களின் உடல்கட்டமைப் பானது பெரியதா (கொழுத்ததா) அல்லது சிறியதா?(ஒல்லியானதா) அல்லது ஆரோக்கியமானதா அல்லது ஆரோக்கியமற்றதா? என்பதை பார்க்கமாட்டான் என தெளிவுபடுத்துகி றார்கள். மேலும் அவர்களிடத்தில் உள்ள செல்வம் அதிகமானதா? அல்லது குறைவானதா என்பதையும் பார்க்கமாட்டான். அத்துடன் அல்லாஹ் தனது அடியார்களை இவ்வாறான விடயங்களில் மிகப்பெரும் இடைவெளி இருப்பதால் இவற்றை அளவு கோளாகக் கொண்டு விசாரித்து தண்டிப்பதோ வெகுமதிகள் வழங்குவதோ இல்லை. மாறாக அவர்களின் உள்ளத்தையும் அவர்களின் உள்ளம் கொண்டுள்ள இறையச்சம், ஆழமான நம்பிக்கை, உண்மை, உளத்தூய்மை அல்லது முகஸ்துதி, உளத்தூய்மை யின்மை போன்ற விடயங்களை அவதானித்தும் அவர்களின் செயல்கள் சீறானதா சீறற்றதா, என்பதை கருத்திற்கொண்டும்தான் அவர்களுக்கு கூலியும் வெகுமதியும் வழங்குகிறான்.