عن عمر بن الخطاب رضي الله عنه مرفوعاً: «إنما الأعمال بِالنيَّات، وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرتُه إلى الله ورسوله فهجرتُه إلى الله ورسوله، ومن كانت هجرتُه لدنيا يصيبها أو امرأةٍ ينكِحها فهجرته إلى ما هاجر إليه».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) கூறினார்கள் செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான். ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக என்றால், அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
இது ஒரு மகத்தான நபிமொழியாகும். இதனை சில அறிஞர்கள் இஸ்லாத்தின் மூன்றிலொன்றாகக் கணித்துள்ளார்கள். ஒரு விசுவாசிக்கு அவனது எண்ணம் மற்றும் அதன் திருத்தத்தின் அளவிற்கேற்ப கூலி வழங்கப்படுகின்றான். யாருடைய செயல்கள் அல்லாஹ்வுக்காக மாத்திரம் இருந்தால் நபிவழிக்கு உடன்படுதல் என்ற நிபந்தனையுடன் அது குறைவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும். யாருடைய செயல்கள் அல்லாஹ்வுக்காக அன்றி மக்களுக்கு காட்டுவதற்காக இருந்தால் அது பாரியதாக, அதிகமானதாக இருந்தாலும் தட்டப்படும். அல்லாஹ்வுக்காக அல்லாது, பெண், பொருள், பதவி போன்ற உலக நோக்கத்திற்காக செய்யப்படும் அனைத்து அமல்களும் அதனுடையவர்களுக்கே திருப்பப்பட்டுவிடும், அல்லாஹ் ஏற்க மாட்டான். ஏனெனில் நற்செயல்கள் ஏற்கப்படுவதற்கான பிரதான இரு நிபந்தனைகள் உளத்தூய்மையும், நபிவழியுமாகும்.