ஹதீஸ் அட்டவணை

பாவங்களில் பெரியதை உமக்கு அறிவிக்கட்டுமா?
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
'அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் 'ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ('ஆகுக!' என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம், நரகம் (இருப்பது) உண்மை தான்' என்றும், (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் அவனை சந்திப்பவர் சுவனம் நுழைவார். அவனுக்கு இணைவைத்த நிலையில் சந்தித்தவர் நரகில் நுழைவார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
சுவனம் உங்களொருவரின் செருப்பு நாரை விட மிக நெருக்கமானதாகும், நரகமும் அதே போன்றுதான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நிச்சயமாக அல்லாஹ் உங்களது உடலையோ, தோற்றத்தையோ பார்ப்பதில்லை, இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் (அநியாயமாகப் பங்கீடு செய்து) கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
சுத்தம் ஈமானின் பாதியாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
எல்லா சமூகத்திற்கும் ஒரு சோதனையுண்டு.எனது சமூகத்தின் சோதனை செல்வம்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
என் சமூகத்தினர் அனைவருக்கும் மன்னிப்பளிக்கப்டும். எனினும் குற்றத்தை அம்பலப்படுத்தியவர்களைத் தவிர.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே மரணிக்க வேண்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நரகின் மீது ஹராமானவர் அல்லது யார் மீது நரகம் ஹராம் என்பதை உங்களுக்கு அறியத்தரட்டுமா?அவர்தான் நெருக்கமாக இருந்து கொள்கின்றவரும்,மிருதுவாகவும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்கின்றவர்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நாளை மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும் போது அதில் எழுபதாயிரம் கடிவாளங்கள் இடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் இழுத்துக் கொண்டு வருவர்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளி வீசும் நட்சத்திரத்தைப் பார்ப்பதை போன்று பார்ப்பார்கள். அந்தஸ்தில் தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத்தாழ்வின் காரணமாக அவ்வாறு பார்ப்பார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
சுவர்க்கமும் நரகமும் விவாதித்துக் கொண்டன.அவ்வமயம் நரகம் எண்ணிடம் அடக்கி ஆளுவோரும்,கர்வம் கொண்டவர்களும் இருக்கின்றனர் என்று கூறியது.மேலும் சுவர்க்கம் என்னிடம் பலவீனமான மனிதர்களும்,ஏழை மக்களும் இருக்கின்றனர்,என்று கூறியது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இந்த உலகம் மூமீனுக்கு சிறைகூடமும்,காபிருக்கு சுவர்க்கலோகமுமாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நான் எழுபது "அஹ்லுஸ் ஸுப்பாக்களை"-திண்ணைத் தோழர்களைப் பார்த்தேன்.அவர்களில் எவரிடமும் தங்களின் மேல் பாகத்தை மறைக்கும் துணி எதுவும் இருக்கவில்லை.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஒரு மனிதன் ஒரு பெண்ணை முத்தமிட்டு விட்டார்.எனவே அவர் உடனடியாக ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அதனை தெரியப்படுத்தினார்.அவ்வமயம் "பகலில் இரு முனைகளிலும்,இரவில் ஒரு பாகத்திலும் நீங்கள் தொழுது வாருங்கள்.நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்"எனும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
"ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய ஒரு குற்றத்தைச் செய்துவிட்டேன்.எனவே அதன் தண்டனையை என் மீது நிறைவேற்றுங்கள்,என்றார்."
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஹகீமே! இந்தப் பொருள் பசுமையானது,இனிமையானது.எவன் அதனை யாசிக்காமல் அதனை ஒரு கொடையாளி தானாக விரும்பிக் கொடுக்கும் நிலையில் பெற்றுக் கொண்டானோ அவனுக்கு அதில் பரகத் உண்டாகும்.எவன் அதனை ஆசையுடன் அதனை எதிர்பார்த்த நிலையில் அதனை எடுத்துக் கொண்டானோ அவனுக்கு அதில் பரகத் உண்டாகாது.அவனின் நிலை உண்டும் வயிறு நிரம்பாதவன் போன்றதாகும்.இன்னும் மேல் கரம்,கீழ் கரத்தை விடவும் சிறந்ததாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நான் சுவர்க்க வாசலில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது அதில் பிரவேசித்தவர்களில் அதிகமானோர் ஏழைகளாக இருந்தனர். செல்வந்தர்களோ தடுக்கப்பட்டிருந்தனர்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அபூ உபைதா பஹ்ரெயினிலிருந்து கொண்டு வந்திருக்கும் பொருள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நான் நினைக்கின்றேன்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ்வே! மறுவுலக வாழ்வையன்றி சொகுசான வாழ்வு வேறில்லை
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அறிந்து கொள்ளுங்கள் இவ்வுலகமும் அதில் இருப்பவைகளும் சபிக்கப்பட்டவைகளாகும் ஆனால் அல்லாஹ்வைின் தியானத்தையும் அதனுடன் தொடர்புடைய விடயங்களையும்,மற்றும் அங்குள்ள அறிஞர்களையும் அறிவைத் தேடுகிறவர்களையும் தவிர.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஸைஹான்,ஜைஹான்,புராத்,நைல் நதிகள் அனைத்தும் சுவர்க்கத்தின் நதிகளிலுள்ளாதாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
சுவர்க்கத்தில் உங்களில் ஒருவரின் ஆகக் குறைந்த இடம் யாதெனில்,அல்லாஹ் அவனிடம் உனக்கு எவ்வளவு இடம் வேண்டுமென விரும்புகிறாய்? என்பான்.அவன் விரும்பிய பின்,அவனிடம் அல்லாஹ் நீ விரும்பினாயா?என்று கேட்பான்.அதற்கு அவன் ஆம் என்று கூறியதும், அல்லாஹ் நீ விரும்பியதும் அது போன்றதும் உனக்குரியது என்று கூறுவான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
சுவர்க்த்தில் ஒரு மரம் உள்ளது, அதன் (அதன் நிழலில்) வேகமாக செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் இறந்து போன எந்த ஒரு முஸ்லிமையும் அவர் தன் பிள்ளைகள் மீது காட்டிய கருணையின் காரணமாக அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ் எந்த சமூகத்தவரின் மனதில் போதுமெனும் குணத்தையும்,நன்மையையும் வைத்திருக்கின்றானோ அவர்களை அதன் பொருப்பிலேயே நான் விட்டு விடுகிறேன்.அம்ர் இப்னு தக்லிபுவும் அவர்களைச் சார்ந்தவரே.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள் : தன் இரு தாடைகளுக்கிடையே உள்ள (நாவின் ) தீங்கையும், ஒருவனது இரு கால்களுக்கிடையே உள்ள (மறையுறுப்பின்) தீங்கையும் அல்லாஹ் பாதுகாத்து விட்டால் அவன் சொர்க்கத்தில் நுழைவான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு