عن جابر بن عبد الله رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
«مَنْ لَقِيَ اللهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ لَقِيَهُ يُشْرِكُ بِهِ دَخَلَ النَّارَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 93]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
'யார் அல்லாஹ்வை இணைவைக்காத நிலையில் சந்திக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். யார் அவனை இணைவைத்த நிலையில் சந்திக்கிறாரோ அவர் நரகில் நுழைவார்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 93]
' அல்லாஹ்விற்கு எதனையும் இணைவைக்காத நிலையில் மரணிப்பவர், அவரின் சில குற்றங்களுக்கு-பாவங்களுக்கு- தண்டனை வழங்கப்பட்டாலும் அவரின் இறுதி முடிவு சுவர்க்கமாகும். யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைத்த நிலையில் மரணிக்கிறாறோ அவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.