ஹதீஸ் அட்டவணை

இறைவா எனது சமாதியை வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே, தமது நபிமார்களின் சமாதிகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்ட ஒரு கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகி விட்டது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு விறகுக் கட்டைகள் சகிதமாக என்னுடன் மக்களில் சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
சூனியத்தை எடுப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது அது ஷைத்தானின் செயலாகும் எனக் கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
யாருடைய தேவை நிறைவேறுவதிலிருந்து சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைத்து விட்டார், அதற்குரிய பரிகாரம் என்ன என வினவ, இறைவா நலவு உன்னிடமிருந்து மாத்திரம் தான், நல்ல சகுனமும் உன்னிடமிருந்து மாத்திரம் தான், உன்னைத் தவிர வேறு இறைவனில்லை என்று கூறட்டும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் அவனை சந்திப்பவர் சுவனம் நுழைவார். அவனுக்கு இணைவைத்த நிலையில் சந்தித்தவர் நரகில் நுழைவார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை நம்புகிறவனின் நாற்பது நாட்களுடைய தொழுகைகள் ஏற்கப்பட மாட்டாது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நட்சத்திர ஜோதிடக் கலையில் ஒரு பகுதியைக் கற்பவன் சூனியக் கலையில் ஒரு பகுதியைக் கற்றவனாவான், அது அதிகரிக்க இதுவும் அதிகரிக்கும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஈமான் எழுபத்து சொச்சம், அல்லது அறுபத்து சொச்சம் கிளைகளைக் கொண்டதாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஒட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
உங்களில் எவரேனும் தீமை ஒன்றைக் கண்டால் அதனை தன் கரத்தால் தடுக்கட்டும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
இஸ்லாத்தை அழகிய முறையில் பின்பற்றினால் அறியாமைக் காலத்தில் செய்தவற்றுக்காக குற்றம் பிடிக்கப்பட மாட்டார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
கடமைகளுடன் மாத்திரம் நின்று கொள்ளல்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
சுத்தம் ஈமானின் பாதியாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
நீங்கள் உங்கள் இறைவனின் சுவர்க்கத்தில் பிரவேசிக்கும் பொருட்டு அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.உங்களின் ஐந்து தொழுகைகளையும் தொழுது வாருங்கள்.உங்கள் செல்வத்தின் ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.மேலும் உங்களின் அதிகாரிளுக்குக் கட்டுப்பட்டு நடவுங்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு