عن بعض أزواج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال:
«مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2230]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவியரில் சிலர் அறிவித்துள்ளார்கள் :
'குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை நம்புகிறவனின் நாற்பது நாட்களுடைய தொழுகைகள் ஏற்கப்பட மாட்டாது'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2230]
குறி சொல்பவனிடம் செல்வதை விட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.' அர்ராப் என்ற சொல்லானது ஜோசியக்காரன், நட்சத்திர குறிசொல்பவன், தடயங்கள்கண்டறிந்து குறிசொல்பவன் அதாவது சில முன்மாதிரி அம்சங்களைப் பயன்படுத்தி தனக்கு மறைவான விடயங்கள் பற்றிய அறிவுள்ளது எனக் கூறுவோர் யாவருக்கும் ஒரு பொதுவான சொல்லாகவே (அர்ராப் என்ற) இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.வெறுமனே குறிசொல்பவனிடம் செல்பவனிடம் மறைவான விடயம் சம்பந்தமாக கேட்டவனுக்கே நாற்பது நாட்கள் தொழுத தொழுகையின் நன்மைகளை அல்லாஹ் தடைசெய்துவிடுகிறான் என்றால் அவனின் பாவத்திற்கானதும் பெரும்பாவத்திற்கானதுமான தண்டனையாகும். இது இந்த செயலின் அபாயத்தை விளக்கப்போதுமான விடயமாகும்.