عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : "من اقتَبَس شُعْبَة من النُّجوم؛ فقد اقتَبَسَ شُعْبة من السِّحْر، زاد ما زاد".
[صحيح] - [رواه أبو داود وابن ماجه وأحمد]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் : "நட்சத்திர ஜோதிடக் கலையில் ஒரு பகுதியைக் கற்பவன் சூனியக் கலையில் ஒரு பகுதியைக் கற்றவனாவான், அது அதிகரிக்க இதுவும் அதிகரிக்கும்".
ஸஹீஹானது-சரியானது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்

விளக்கம்

மறைவான அறிவு அல்லாஹ் தனக்கு மாத்திரம் உரித்தாக்கிக் கொண்டுள்ளதால் அதன் இரகசியங்களைக் கண்டுபிடித்து, அறிய முனையும் அனைத்து முயற்சிகளையும் நபி (ஸல்) அவர்கள் ஒழித்தார்கள். பூமியில் நடைபெறும் நிகழ்வுகளை வானியல் நிலைகளை வைத்து அனுமானிக்கும் நட்சத்திர ஜோதிடமும் இதில் உள்ளடங்குகின்றது. இதனைக் கற்பது சூனியத்தில் ஒரு வகை என்றும், மனிதன் அதனை அதிகரித்துக் கொண்டு செல்லும் போதெல்லாம் சூனியத்தையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றான் என நபியவர்கள் விளக்கியுள்ளார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நட்சத்திரங்களை வைத்து எதிர்கால நிகழ்வுகளை அறிவிக்கும் நட்சத்திர ஜோதிடம் ஹராமானதாகும், ஏனெனில் அதுவும் மறைவான அறிவை வாதிடுவதில் அடங்குகின்றது.
  2. நட்சத்திர ஜோதிடமும் ஓரிறைக் கொள்கைக்கு முரண்படும் சூனியத்தின் ஒரு வகையாகும்.
  3. நட்சத்திர ஜோதிடத்தை அதிகமாகக் கற்குமளவு சூனியத்தைக் கற்பதும் அதிகமாகின்றது.
  4. சூனியம் பல கூறுகளைக் கொண்டது.
மேலதிக விபரங்களுக்கு