عن جابرٍ رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول:
«إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ».

[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் :
'நிச்சயமாக ஒரு (முஸ்லிம்) அடியானுக்கும்; இணைவைப்பிற்கும் இறைநிராகரிப்பிற்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையை விடுவதாகும் '

ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

கடமையான தொழுகையை விட்டுவிடுவதை இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டித்துள்ளார்கள்.மேலும் ஒரு மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைநிராகரிப்பில் விழுந்து விடுவதற்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையை விட்டுவிடுவதாகும் எனத் தெரிவித்துள்ளார்கள். தொழுகை இஸ்லாத்தில் இரண்டாவது முக்கிய கடமையாகும்.இஸ்லாத்தில் அதற்கென தனியான அந்தஸ்த்து உண்டு.தொழுகை கட்டயாக் கடமை என்பதை ஏற்றுக்கொள்ளாதவன் இறைநிராகரிப்பாளன் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.அலட்சியம்,மற்றும் சோம்பலின் காரணமாகஅதனை நி;றைவேற்றாது இருப்பவனும் காபிராவான்.இது ஸஹாபாக்கள் -நபித்தோழர்களின் ஏகோபித்த முடிவாகும். யார் விட்டு விட்டுத் தொழுகிறாறோ அவரும்; இங்கு குறிப்பிட்ட கடுமையான எச்சரிக்கைக்கு உட்படுவார்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தொழுகை மற்றும்; அதனைப்பேணித்தொழுதலின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளமை. இதுவே ஈமானுக்கும் இறைநிராகரிப்பிற்கும் இடையிலான பிரிகோடாக காணப்படுகின்றமை
  2. தொழுகையை விட்டுவிட்டு அதனை வீணாக்குபவருக்கான கடுமையான எச்சரிக்கை இந்த ஹதீஸில் உண்டு.
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு