ஹதீஸ் அட்டவணை

பாவங்களில் ஈடுபடாமல் ஹஜ் செய்தவர் அன்று பிறந்த பாலகன் போன்று திரும்புவார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இறைவா எனது சமாதியை வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே, தமது நபிமார்களின் சமாதிகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்ட ஒரு கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகி விட்டது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு விறகுக் கட்டைகள் சகிதமாக என்னுடன் மக்களில் சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க) இரவில் நின்று வங்கியவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரணை செய்(யும் நிலையை நீங்கள் ஏற்படுத்)திட வேண்டாம்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நபியவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகையிலும் ஸலாம் கொடுத்ததும் பின்வருமாறு ஓதுவார்கள் : "லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீகலஹூ லஹுல்முல்கு வலஹுல்ஹம்து வஹுவ அலாகுல்லிஷைஇன் கதீர், லாஹெளல வலாகுவ்வத இல்லாபில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹு வலாநஃபுது இல்லாஇய்யாஹு லஹுந்நிஃமது வலஹுல் பழ்லு வலஹுஸ் ஸனாஉல் ஹஸன். லாஇலாஹ இல்லல்லாஹு முஃலிஸீன லஹுத்தீன வலௌ கரிஹல் காபிரூன்".
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இத்தினங்களை விட வேறு எந்தத் தினத்தில் செய்யக் கூடிய நற்செயல்களும் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதல்ல.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அஸர் தொழுகையை விட்டவனின் நற்செயல்கள் அழிந்து விடும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
யார் தொழுகைக்காக வுழுசெய்து அதனை அழகான முறையில் செய்தால் அவரது பாவங்கள் உடலிருந்து வெளியேறி விடுகின்றன.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கப்ரில் பெரும்பான்மையான வேதனை அதன் காரணமாகத் தான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நீங்கள் கப்ருகளை முன்னோக்கித் தொழ வேண்டாம், அவற்றின் மீது உட்காரவும் வேண்டாம்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
'நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு மூட்டுக்கள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) சேர்த்துப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்".
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நபி (ஸல்) அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் "அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ" என்று கூறுவார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்ததும் "அஸ்தஃபிருல்லாஹ்" என்று மூன்று தடைவ சொல்லி விட்டு பின்வரும் துஆவை ஓதுவார் : "அல்லாஹும்ம அந்தஸ் ஸலாமு வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி".
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில், அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவாயாக.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை" என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, "தொழுகை அறிவிப்பு சப்தம் உமக்குக் கேட்கிறதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் "அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!" (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
(இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். அந்த நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
கடமைகளுடன் மாத்திரம் நின்று கொள்ளல்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
சுத்தம் ஈமானின் பாதியாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழி
நீங்கள் அதிகமாக ஸுஜூத் செய்யுங்கள்.ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செய்யும் ஒவ்வொரு ஸுஜூதின் மூலமும் அல்லாஹ் உங்களின் ஒரு அந்தஸ்தைக் கூட்டாமலும்,அதன் மூலம் உங்களின் ஒரு தவறை அழித்து விடாமலும் இருப்பதில்லை.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஒரு முஸ்லிம் அடியான் அல்லது ஒரு விசுவாசி வுழூ செய்யும் போது அவன் தனது முகத்தைக் கழுவியதும் அந்தத் தண்ணீருடன் அல்லது இறுதித் துளி தண்ணீருடன் அவன் தன் இரு கண்களாலும் பார்த்த பாவங்கள் யாவும் வெளியேறி விடும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
கீழ் கையை விடவும் மேல் கையே சிறந்தது.ஏனெனில் மேல் கை தர்மம் செய்யக்கூடியது,கீழ் கை யாசிக்கக்கூடியது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நிச்சயமாக அவன் ஏலவே செலவு செய்ததுதான் அவனின் பணம்.அவன் தாமதப்படுத்தி வைத்தவை அவனின் வாரிஸின் பணம்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
பனூஸலமாவே! நீங்கள் உங்கள் இருப்பிடத்திலேயே இருந்து கொள்ளுங்கள் உங்களின் சுவடுகளுக்கும் நன்மை எழுதப்படும்.நீங்கள் உங்கள் இருப்பிடத்திலேயே இருந்து கொள்ளுங்கள் உங்களின் சுவடுகளுக்கும் நன்மை எழுதப்படும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அழும் மனிதன்,பால் அதன் மடிக்குள் திரும்பிச் செல்லும் வரையில் நரகம் செல்ல மாட்டான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
யுத்தம் ஒரு சதியாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
உங்களில் எவரேனும் தொழும் வேளையில் அவருக்கு சிறு தூக்கம் ஏற்பட்டால் அவர் தன்னை விட்டும் தூக்கம் நீங்கும் வரையில் நித்திரை செய்து கொள்ளவும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நான் நபி (ஸல்)அவர்களுடன் ஐவேளை தொழுதிருக்கிறேன். அவர்களின் தொழுகை நடு நிலையாகவே இருந்தது. அவரின் குத்பா நடு நிலையாகவே இருந்தது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
"போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை, மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்."
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
அல்லாஹ்வின் பாதையில் போரிட சென்ற வேளையில் ஒருவர் நோன்பு வைத்தால்,வானம் பூமிக்கிடையே உள்ள தூரம் போல்,அல்லாஹ்அவருக்கும் நரகத்துக்குமிடையே தூரமாக்கி வைப்பான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
எனது வயது ஏழு வருடங்களாக இருக்கும் போது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்கிறேன்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகத்தில் பல்லக்குஅமைக்காமல்) ஒட்டகத்தின் சேணத்துடன் (இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றார்கள், அதுவே அவர்களின் பொதி சுமக்கும் ஒட்டகமாகவும் இருந்தது.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
ஜாஹிலிய்யாக் காலத்தில் உகாள் மஜின்னா, துல் மஜாஸ் ஆகியன சந்தைகளாக இருந்தன.(அவற்றில்) ஹஜ்ஜுடைய நாட்களில் வியாபாரம் செய்வதை (நபித் தோழர்கள்) பாவமானதாகக் கருதினார்கள். இது குறித்து (ஹஜ் காலங்களில் வியாபாரத்தின் மூலம்) உங்கள் இரட்சகனின் அருளைத் தேடிக்கொள்வதில் உங்களுக்கு எவ்விதக் குற்றமுமில்லை எனும் வசனம் ஹஜ் காலத்தில் இறங்கியது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
சுஹதாக்கள் எனும் வீர மரணம் எய்தியோர் ஐவர்:அவர்கள் கொள்ளை நோய்,வயிற்று வழி,நீரில் மூழ்குதல்,இடிபாடுகளில் சிக்கி விடுதல் என்பதன் காரணமடைந்தவரும்,அல்லாஹ்வின் பாதையில் வீர மரணம் அடைந்தவனுமாவர்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
போரிலிருந்து திரும்பி வருவது போரில் ஈடுபடுவது போன்ற நன்மையை பெற்றுத் தரும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு
இதற்குப் பகரமாக நாளை மறுமை நாளில் எழுநூறு ஒட்டகம் உங்களுக்குக் கிடைக்கும்,அவை அனைத்தும் கடிவாளம் இடப்பட்டிருக்கும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு