عَنِ ابْنَ مَسْعُودٍ رضي الله عنه قَالَ:
عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَفِّي بَيْنَ كَفَّيْهِ، التَّشَهُّدَ، كَمَا يُعَلِّمُنِي السُّورَةَ مِنَ القُرْآنِ: «التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ».
وفي لفظ لهما: «إِنَّ اللهَ هُوَ السَّلَامُ، فَإِذَا قَعَدَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَقُلْ: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ، فَإِذَا قَالَهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الْمَسْأَلَةِ مَا شَاءَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6265]
المزيــد ...
இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எனது இரண்டு கைகளையும் பிடித்து) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில், குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்{ஹதை (அத்தஹிய்யாத்தைக்) எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள். (அது பின்வருமாறு) ' அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு' பொருள் : (அனைத்துக் காணிக்கைகளும் வணக்கங்களும்-தொழுகைகளும்- பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் நிலவட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி நிலவட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்). புஹாரி முஸ்லிமின் இன்னொரு அறிவிப்பில்' நிச்சயமாக அல்லாஹ் ' அஸ்ஸலாம் ஆவான்' உங்களில் ஒருவர் தொழுகையில் இறுதி அமர்வில் அமர்ந்தால் 'அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் என்று கூறட்டும். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்). இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 6265]
தொழுகையில் ஓதப்படவேண்டிய தஷஹ்ஹுதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். நபியவர்கள் இப்னுமஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அவரின் கையை தனது இருகரங்களால் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.' அல்குர்ஆனின் அத்தியாயத்தை கற்றுக் கொடுப்பது போன்று இதனை கற்றுக் கொடுத்தார்கள்' என்ற வார்த்தையானது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த தஷஹ்ஹுதின் வார்த்தை மற்றும் கருத்தில்; அதீத கவனம் செலுத்தியுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது. நபியவர்கள் பின்வறுமாறு கூறினார்கள்: அத்தஹிய்யாத்து லில்லாஹ் (அனைத்துக் காணிக்கைகளும் அல்லாஹ்வுக்கே உரியன.') என்பதன் கருத்து: அல்லாஹ்வை மேன்மைப்படுத்தும் எல்லா வார்த்தைகள்; மற்றும் செயல்களைக் குறிக்கிறது. இவையனைத்திற்கும் மிகவும் தகுதியானவனாக அல்லாஹ் இருக்கிறான். 'அஸ்ஸலவாத்' என்பதன் கருத்து : பர்ழான மற்றும் ஸுன்னத்தான அனைத்து தொழுகைகளும் அல்லாஹ்வுக்கே உரியன, என்பதாகும். 'அத்தய்யிபாத்து' என்பதன் அர்த்தம்: அல்லாஹ்வின் பரிபூரண நிலையை காட்டும் வார்த்தைகள்,செயல்கள் மற்றும் அழகிய வர்ணனைகள் அனைத்திற்கும் அல்லாஹ் மிகத்தகுதியானவன் அவை அவனுக்கே உரியது என்பதாகும். 'அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு என்பது'. எல்லாவிதமான ஆபத்துக்கள், துயர்களிருந்தும் ஈடேற்றம் பெறவும், அனைத்து நன்மையான விடயங்களிலும் அதிகம் ஈடுபடவும் நபியவர்களுக்காக கேட்கும் ஒரு பிரார்த்தனையாகும். 'அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் என்பது' : தொழுபவர் மற்றும் வானம் பூமியிலுள்ள நல்லடியார் அனைவரின் ஈடேற்றத்திற்காக கேட்கப்படும் பிரார்த்தனை. 'அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு' என்பது,: உண்மையாக வணங்கப்படக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதை நான் மிக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன். 'அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' என்பது; நபியவர்களின் அடிமைத்துவத்தையும், இறுதி தூதுத்துவத்தையும் நான் ஏற்று அங்கீகரிக்கிறேன் என்று பொருளாகும்.
அத்தஹிய்யாத்தை ஓதிய பின் தொழுபவர் அவருக்கு விரும்பிய பிரார்த்னையை தேர்வு செய்து ஓதவும் நபியவர்கள் வலியுறுத்தினார்கள்.