عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه:
أنه كَانَ يُكَبِّرُ فِي كُلِّ صَلَاةٍ مِنَ الْمَكْتُوبَةِ وَغَيْرِهَا، فِي رَمَضَانَ وَغَيْرِهِ، فَيُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، ثُمَّ يَقُولُ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ يَقُولُ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، قَبْلَ أَنْ يَسْجُدَ، ثُمَّ يَقُولُ: اللهُ أَكْبَرُ حِينَ يَهْوِي سَاجِدًا، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الْجُلُوسِ فِي الِاثْنَتَيْنِ، وَيَفْعَلُ ذَلِكَ فِي كُلِّ رَكْعَةٍ، حَتَّى يَفْرُغَ مِنَ الصَّلَاةِ، ثُمَّ يَقُولُ حِينَ يَنْصَرِفُ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَقْرَبُكُمْ شَبَهًا بِصَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنْ كَانَتْ هَذِهِ لَصَلَاتَهُ حَتَّى فَارَقَ الدُّنْيَا.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 803]
المزيــد ...
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் :
ஒவ்வொரு கடமையான மற்றும் ஸுன்னத்தான தொழுகைகளிலும், ரமழானிலும் அதுவல்லாத நேரங்களிலும் தக்பீர் கூறுவார்கள்.தொழுகைக்காக எழுந்து நின்றால் (இஹ்ராம்)தக்பீர் கூறுவார்கள், ருகூவிற்கு செல்லும் போது தக்பீர் கூறுவார்கள், ருகூஉலிருந்து முதுகை நிமிர்ததும் போது 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்' என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ஸுஜூதிற்கு செல்ல முன் 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுவார்கள், பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் எழும்பும் போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகையை முடித்ததும் அபூஹுரைரா ரழியல்லாஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவனின் மீது சத்தியமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகைக்கு ஒப்பாகும் அளவிற்கு தொழுகை நடாத்தினேன். நபியவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும் வரை அவர்களின் தொழுகை இவ்வாறே இருந்தது.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 803]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுத முறையின் ஒரு பகுதியை அபூஹுரைரா அறிவிக்கிறார்கள். நபியவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் இஹ்ராம் தக்பீர் கூறுவார்கள், பின்னர் ருகூவிற்கு செல்லும்; போதும், ஸுஜூதிற்கு செல்லும் போதும் ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இரண்டாவது ஸுஜூதிற்கு செல்லும் போதும் அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும், மூன்று மற்றும் நான்கு ரக்அத்துக்கள் உள்ள தொழுகைகளில் முதலாவது தஷஹ்ஹுத் ஓதியதின் பின் நிலைக்கு வரும்போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகை நிறைவேற்றி முடியும் வரையில் செய்வார்கள். ருகூவிலிருந்து நிலைக்கு வரும்போது 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்' என்றும் நிலைக்கு வந்ததும் 'ரப்பனா வலகல் ஹம்து' என்றும் கூறுவார்கள் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு தொழுகையை முடித்ததன் பின் எனது ஆன்மா யாரின் கைவசம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகைக்கு ஒப்பாகும் அளவிற்கு தொழுகை நடாத்தினேன். நபியவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும் வரை அவர்களின் தொழுகை இவ்வாறே இருந்தது எனக் கூறினார்கள்.