عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عنه سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ:
«قَالَ اللهُ تَعَالَى: قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ، وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا قَالَ الْعَبْدُ: {الْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِينَ}، قَالَ اللهُ تَعَالَى: حَمِدَنِي عَبْدِي، وَإِذَا قَالَ: {الرَّحْمَنِ الرَّحِيمِ}، قَالَ اللهُ تَعَالَى: أَثْنَى عَلَيَّ عَبْدِي، وَإِذَا قَالَ: {مَالِكِ يَوْمِ الدِّينِ}، قَالَ: مَجَّدَنِي عَبْدِي، -وَقَالَ مَرَّةً: فَوَّضَ إِلَيَّ عَبْدِي-، فَإِذَا قَالَ: {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ}، قَالَ: هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا قَالَ: {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ، صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلا الضَّالِّينَ}، قَالَ: هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 395]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தொழுகையை (ஸுறா பாத்திஹாவை) எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், 'என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்' என்று கூறுவான்.
அடியான் 'அர்ரஹ்மானிர் ரஹீம்' (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், 'என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்' என்று கூறுவான்.
அடியான் 'மாலி;கி யவ்மித்தீன்;' (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், 'என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்' என்று கூறுவான். மேலும் 'என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான்' என்றும் கூறுவான் )
மேலும், அடியான் 'இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்' (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், 'இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்' என்று கூறுவான்.
அடியான் 'இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வலழ் ழால்லீன்'. (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்களின் வழியுமல்ல வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் 'இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்' என்று கூறுவான்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 395]
அல் ஹதீஸுல் குத்ஸிய்யில் அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸூறதுல் பாத்திஹாவை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் இரண்டாகப்பிரித்துள்ளேன். அதன் ஒரு அரைப்பகுதி எனக்குரியதாகும். மற்றையது அவனுக்குரியதாகும்.
எனவே அதன் முதல் பகுதியானது புகழ், பாராட்டு, அல்லாஹ்வை கண்ணியப்படுத்தல் போன்ற வற்றை கொண்டுள்ளது நான் அதற்கு உரிய மிகச் சிறந்த கூலியை கொடுப்பேன் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அதன் இரண்டாம் பகுதி அடியானின் பணிவு (மன்றாட்டம் ), பிரார்த்தனை செய்தல் போன்ற வற்றை உள்ளடக்கியுள்ளது. எனவே அவனின் வேண்டுதலுக்கு பதிலளிப்பேன் அவன் கேட்பவற்றை வழங்குவேன் எனவும் அவன் குறிப்பிடுகிறான்.
தொழுபவர் 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் 'என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்' என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர்ரஹீம் எனக் கூறினால் அதற்கு அல்லாஹ் எனது அடியான் என்னை நன்றி பாராட்டிவிட்டான் என்று கூறுவான். அதாவது அனைத்து உயிரினங்களுக்குமான எனது பரந்த அருட்கொடைகளை ஏற்றுக்கொண்டான் எனக் கூறுவான். ' மாலிகி யவ்முத்தீன் என்று கூறினால் அதற்கு அல்லாஹ் என்னை எனதடியான் கண்ணியப் படுத்திவிட்டான் என்று பதில் கூறுவான் இது எல்லையில்லா அவனின் சிறப்பை எடுத்துக்காட்டும்.
அடியான் (இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்) என்று ஓதினால் அதற்கு அல்லாஹ் இது எனக்கும் எனது அடியானுக்குமிடையிலான விவகாரமாகும் எனப் பதிலளிக்கிறான்.
மேற்படி வசனத்தில் முதல் அரைப்பகுதி அதாவது 'இய்யாக நஃபுது' 'உன்னையே வணங்குகிறோம்' அல்லாஹ்விற்குரிய பகுதியாகும். இது உலூஹிய்யா -இறைமைத்துவம் - அல்லஹ்வுக்குரியது என்பதை ஏற்று, வணக்க வழிபாடுபாடுகளினூடாக அடிபணிதலைக் குறிக்கிறது. இத்துடன் அல்லாஹ்விற்குரிய பகுதி முடிவுறுகிறது.
இந்த வசனத்தின் இரண்டாம் அரைப்பகுதி அடியானுடன் தொடர்பானது. அது 'இய்யாக நஸ்தஈன்' (உன்னிடமே உதவிதேடுகிறோம்) என்பதாகும். அல்லாஹ்விடம் உதவி கோருதல் ஆகும். அதனை நிறைவேற்றித் தருவதாக அல்லாஹ் அவனுக்கு வாக்களிக்கிறான்.
அடியான் 'இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வலழ்ழால்லீன்'
(உன்னுடைய கோபத்திற்கு உள்ளானோர் ,மற்றும் நெறி தவறிப்போனோரின் வழி அல்லாது உனது அருளைப்பெற்றவர்களின் நோரான வழியில் எம்மை செலுத்திடுவாயாக) என்று சொன்னால், அல்லாஹ் 'இது என் அடியானின் கெஞ்சுதலும் (மன்றாட்டம் , )பிரார்த்தனையுமாகும் . என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்' அவனது இறைஞ்சுதலுக்கு நான் பதிலளித்து விட்டேன் என்று கூறுவான்.