عن عائشة رضي الله عنها قالت: قال النبي صلى الله عليه وسلم:
«لَا تَسُبُّوا الْأَمْوَاتَ، فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 1393]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் :
'இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள்''.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 1393]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் மரணித்தோரை ஏசுவதும், அவர்களை மானபங்கப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டது என்பதுடன், அது கெட்ட குணங்களில் ஒன்றாகும் என்றும் தெளிவு படுத்துகிறார்கள். நற்காரியங்கள் அல்லது தீயகாரியங்ளை செய்தவர்களாக இறைவனிடம் அவர்கள் சென்றுவிட்டனர். அவர்களை ஏசுவதால் அந்த ஏச்சுப்பேச்சுகள் அவர்களை சென்றடைவதில்லை, மாறாக உயிர் வாழும் அவர்களின் உறவுகளையே அது பாதிக்கிறது.