عن جُبَير بن مُطْعِم رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول:
«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2556]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஜுபைர் இப்னு முத்இம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
உறவை துண்டித்து நடப்பவன் சுவனம் நுழைய மாட்டான்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 2556]
தனது உறவுகளுடன் உறவை முறித்து அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்காது, அல்லது அவர்களுக்கு நோவினை செய்து, கெடுதி செய்பவர் சுவர்கத்தினுள் நுழையும் தகுதியை இழந்துவிட்டவராவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.