عن حذيفة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «لا يدخل الجنة قَتَّات».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி) கூறுகின்றார்கள் : "கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழைய மாட்டான்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

மக்களிடையே குழப்ப நிலையை உருவாக்கும் நோக்கில் கோள் சொல்லித் திரிபவனுக்கு அவன் சுவனம் நுழைய மாட்டானென நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். அதாவது அவனது பாவத்தின் அளவிற்கேற்ப தண்டனைக்குப் பின்னர் சுவனம் நுழைவானே தவிர முதலிலேயே நுழைய மாட்டான். இந்நபிமொழியின் படி கோள் சொல்வது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. கோள் சொல்வதில் மோசமான தாக்கம், மற்றும் பின்விளைவுகள் உள்ளதால் அது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
  2. இந்த மார்க்கம் முஸ்லிம்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் ஏற்படும் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு