عن أنس بن مالك رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «من أحبّ أن يُبْسَطَ عليه في رزقه، وأن يُنْسَأَ له في أَثَرِهِ؛ فَلْيَصِلْ رحمه».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா (ரலி) கூறுகின்றார்கள் : "தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீடிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

இந்த நபிமொழி உறவுகளைப் பேணுவதை ஊக்குவிப்பதுடன், அல்லாஹ்வின் திருப்தியை அடைவதோடு மட்டுமல்லாமல் அதன் சில நன்மைகளையும் தெளிவுபடுத்துகின்றது. ஏனெனில் இது மனிதன் மிகவும் விரும்பக்கூடிய இவ்வுலக நலவுகளை அடையவும் காரணமாக உள்ளது. மேலும் அவனின் வாழ்வாதாரம் விசாலமாக்கப்படவும், வாழ்நாள் நீடிக்கப்படவும் காரணமாக இது உள்ளது. "ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான்" என்ற வசனத்தின் அர்த்தம் என்னவெனில் வாழ்நாள் நீடிப்பதற்கான காரணிகளை மேற்கொண்ட பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணையே பிற்படுத்தப்பட மாட்டாது. உதாரணமாக ஒரு மனிதனின் வாழ்நாள் ஐம்பது வருடங்கள் என வைத்துக் கொண்டால், மரணத்திற்கு முன் அவன் உறவுகளுடன் சேர்ந்திருப்பதன் மூலம் அவனுடைய வாழ்நாள் அறுபது வருடங்கள் வரை நீளும், அதை விடப் பிற்படுத்தப்பட மாட்டாது, இவையைனைத்தையும் அல்லாஹ் முதலிலேயே அறிந்து வைத்துள்ளான், இருப்பினும் சில வானவர்களுக்கு அது மறைந்திருக்கும்."(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான்" என்ற வசனம் வானவர்களிடம் உள்ள பதிவிலுள்ளதையும், "அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது" எனும் வசனம் அனைத்தையும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ள, மாற்றங்கள் ஏதும் நிகழாத மூலப் பதிவேட்டையும் குறிக்கின்றது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. உறவினர்களுடன் சேர்ந்து நடப்பதை ஊக்குவித்தல்.
  2. வாழ்வாதாரம் விசாலமாவதற்கும், வாழ்நாள் நீளவும் அல்லாஹ் உறவினர்களுடன் சேர்ந்திருப்பதை பலமான ஒரு காரணமாக வைத்துள்ளான்.
  3. செயலுக்கேற்ப கூலியுண்டு, நலவு செய்து உபகாரம் புரிபவதன் மூலம் உறவினவர்களுடன் சேர்ந்து நடப்பவருக்கு அவரது வாழ்வாதாரத்திலும், வாழ்நாளிலும் அல்லாஹ் சேர்ந்து நடக்கின்றான்.
  4. காரியங்கள் நடைபெற காரணிகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தல், ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் வாழ்நாள் நீளுதல், வாழ்வாதாரம் விசாலமடைதல் என்ற காரியங்கள் நிகழ உறவினர்களுடன் சேர்ந்திருத்தலை காரணமாக ஆக்கியுள்ளார்கள்.
மேலதிக விபரங்களுக்கு