عن أبي صرمة رضي الله عنه مرفوعاً: «من ضارَّ مسلما ضارَّه الله، ومن شاقَّ مسلما شقَّ الله عليه».
[حسن] - [رواه أبوداود والترمذي وابن ماجه وأحمد]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸிர்மா (ரலி) கூறுகின்றார்கள் : ''எவன் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமைக் கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் கஷ்டத்தில் ஆழ்த்துவான்''.
ஹஸனானது-சிறந்தது - இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்

விளக்கம்

முஸ்லிமுக்கு அவனது உடலிலோ, குடும்பத்திலோ, சொத்திலோ, பிள்ளைகளிலோ நோவினை செய்தல், தீங்கிழைத்தல், சிரமம் கொடுத்தல் போன்றன ஹராம் என்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது. அவ்வாறு செய்பவனுக்கு அதற்கேற்ற கூலியையே அல்லாஹ்வும் வழங்குகின்றான். இங்கு தீங்கு ஒரு நலவை இழக்கச் செய்வதாகவோ, கெடுதியை உருவாக்குவதாகவோ, எவ்விதத்திலோ இருக்கலாம். வியாபாரத்தில் மோசடி செய்தல், ஏமாற்றுதல், அதில் குறைகளை மறைத்தல், தனது சகோதரருக்கு எதிராக திருமணப் பேச்சுவார்த்தை நடத்துதல் போன்றனவும் இதில் அடங்கும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஒரு முஸ்லிமுக்கு எவ்விதத்திலும் நோவினை செய்வது கூடாது.
  2. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.
  3. முஸ்லிம் அடியார்களை அல்லாஹ் தானே முன்வந்து பாதுகாக்கின்றான்.
மேலதிக விபரங்களுக்கு