عن أبي هريرة رضي الله عنه أَن النبيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ:
«الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُر أَحَدُكُم مَنْ يُخَالِل».
[حسن] - [رواه أبو داود والترمذي وأحمد] - [سنن أبي داود: 4833]
المزيــد ...
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறார்; என்பதைக் அவதானிக்கட்டும்'.
[ஹஸனானது-சிறந்தது] - [رواه أبو داود والترمذي وأحمد] - [سنن أبي داود - 4833]
ஒரு மனிதன் தனது குணத்திலும்; ஒழுக்கத்திலும் அவனது தோழர்கள் மற்றும் நண்பர்களின் குணங்களை ஒத்திருக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். நட்பானது பண்பாடு, நடத்தை மற்றும் ஏனைய விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நீங்கள் ஒரு நல்ல நண்பரைத் தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப் படுகிறீர்கள். ஏனென்றால் ஒரு நல்ல நண்பன் நம்பிக்கை, (ஈமான்) நேர்வழி ஆகியவற்றுக்கு வழிகாட்டுவதுடன், நல்ல செயல்களில் தன் நண்பனுக்கு உதவுபவனாகவும் இருப்பான்.