عَنْ أَبِي مُوسَى رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّمَا مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ كَحَامِلِ الْمِسْكِ وَنَافِخِ الْكِيرِ، فَحَامِلُ الْمِسْكِ: إِمَّا أَنْ يُحْذِيَكَ، وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً، وَنَافِخُ الْكِيرِ: إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإِمَّا أَنْ تَجِدَ رِيحًا خَبِيثَةً».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2628]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
((நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கின்றவனின் நிலையையும், கொல்லனின்; நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம்.
ஆனால், (உலை ஊதுபவனோ) கொல்லனோ ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 2628]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களில் இரு வகையினர் குறித்து உதாரணம் கூறுகிறார்கள்.
முதலாவது: அல்லாஹ்வின் பால் வழிகாட்டி அவனின் திருப்தியை பெற்றுக்கொள்ளவும் அவனுக்கு கட்டுப்படுவதில் ஒத்தாசைபுரியும் ஸாலிஹான (நல்ல) நண்பன். இவ்வாறான நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியாகும். ஒன்றில் அவன் உனக்கு கஸ்தூரி தருவான் அல்லது நீ அவனிடம் கஸ்தூரி வாங்கி பயன்பெறுவாய். அல்லது நீ அவனிடம் நருமணத்தையாவது நுகர்வாய்.
இரண்டாமவர் : அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் பாவகாரியங்களுக்கு துணை நிற்கும் தீய நண்பன். இவனிடமிருந்து அசிங்கமான செயற்பாடுகளையே கண்டுகொள்வாய் அத்துடன் இவ்வாறானவருடனான சகவாசத்தினால் பிறரின் இழிசொல்லே பயனாய் கிடைக்கும். இவ்வாறான நண்பனுக்கு உதாரணம் இரும்புப்பட்டறையில் நெருப்பூதும் கொல்லனாகும். இவ்வாறனவனின் சகவாசமானது அப்பட்டறையில் -இரும்பு உலையிலிருந்து வரும் நெருப்புத்தூல்கள் உனது ஆடையை எரித்து விடலாம்; அல்லது அவனிடம் அருவருப்பான வாசனையை பெற்றுக் கொள்ளலாம்.