+ -

عن أبي بَكرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
«إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ هَذَا الْقَاتِلُ، فَمَا بَالُ الْمَقْتُولِ؟ قَالَ: «إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 31]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :
'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டு அதில் கொலைசெய்தவனும், கொலைசெய்யப்பட்டவனும் நரகத்திற்கே செல்வார்கள் என்று கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! கொலை செய்தவன் (நரகத்திற்குச் செல்வது நியாயமானது) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என நான் அவர்களிடம் கேட்டதற்கு, நபியவர்கள் 'அவர் இவரைக் கொல்ல வேண்டுமென்று பேராவல் கொண்டிருந்தார்' என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 31]

விளக்கம்

இந்த ஹதீஸில், இரு முஸ்லிம்கள் தமது வாட்களினால் மற்றவரை கொலை செய்து அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் சந்தித்துக் கொண்டால் கொலைசெய்தவர் தனது தோழரை கொலை செய்யதன் காரணமாக நரகம் செல்வார் என இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அத்துடன் கொலைசெய்யப்பட்டவரும் நரகம் செல்வார் எனக் குறிப்பிட்டது நபித்தோழர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது அதனால் நபியவர்கள் கொலைசெய்யப்பட்டவர் எப்படி நரகில் இருப்பார் என வினவினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது தோழரை கொல்ல வேண்டும் என்ற ஆவலுடனே அவரும் மோதினார். ஆனால் கொலை செய்தவர் மிகவிரைவாக செயற்பட்டு அவரை முந்தி கொலை செய்து விட்டார் என விளக்கமளித்தார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية الطاجيكية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада Озарӣ الأوزبكية الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஒரு தீமையை செய்வதற்காக உள்ளத்தால் உறுதி கொண்டு அதற்குரிய செயற்பாடுகளில் (காரண கரியங்களில்) ஈடுபட்டால் அதற்குரிய தண்டனை கிடைக்கும்.
  2. முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் சண்டையிட்டுக்கொள்வது கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குரிய தண்டனை நரகம் என வாக்களிக்கப்பட்டிருத்தல்.
  3. அத்துமீறி நடப்போர், குழப்பம் விளைவிப்போர் ஆகியோரின் அட்டகாசங்களை கட்டுப்படுத்தும் முகமாக முஸ்லிம்களுக்கு மத்தியில் சண்டையிட்டுக் கொள்வது மேற்படி எச்சரிக்கைக்குள் உள்ளடங்கமாட்டாது.
  4. பெரும்பாவம் செய்தவர் குறித்த பாவத்தை செய்ததினால் மாத்திரம் அவன் காபிராகி விடமாட்டான். காரணம் நபியவர்கள் இங்கு சண்டையில் ஈடுபட்ட இருவரையும் முஸ்லிம்களென்றே அடையாளப்படுத்தியுள்ளமை இதற்கு ஆதாரமாக உள்ளது.
  5. இரண்டு முஸ்லிம்கள் உயிரைப்பறிக்கும் எந்த ஆயுதமாயினும் அதன் மூலம் சண்டையிட்டு ஒருவர் மற்றவரை கொலை செய்துவிட்டால் கொலை செய்தவருக்கும் கொல்லப்பட்டவருக்குமான இருப்பிடம் நரகமாகும். இங்கு வாள் என ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருப்பது உதாரணத்திற்காகவே அன்றி வாளினால் சண்டையிட்டு மரணித்தால்தான் நரகம் எனப் புரிந்து கொள்ளக் கூடாது.
மேலதிக விபரங்களுக்கு