عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال:
«الْكَبَائِرُ: الْإِشْرَاكُ بِاللهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَالْيَمِينُ الْغَمُوسُ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 6675]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 6675]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெரும்பவாங்கள் பற்றி தெளிவுபடுத்துகிறார்கள்; அவற்றை செய்பவன் இம்மை அல்லது மறுமையில் கடுமையான எச்சரிக்கைக்கு உட்படுவான்.
அவற்றுள் முதலாவது : அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும் : இதன் கருத்து ; வணக்க வழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதவருக்கு செலுத்துதல், உலூஹிய்யா ருபூபிய்யா,அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத் -(அல்லாஹ்வின் அழகிய நாமங்களும் பண்புகளும்) போன்ற விடயங்களில் அல்லாஹ் தனக்கென தனித்துவமாக பெற்றிருக்கும் விடயங்களில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதோரும் பெற்றுள்ளனர் என சமப்படுத்துவதினை குறிக்கும்.
இரண்டாவது : ' பெற்றோரைத் துன்புறுத்துதல்
நோவினை செய்தல்': என்பது சொல் மற்றும் செயல் ரீதியான அனைத்து விடயங்கள் மூலமும் பெற்றோரை துன்புறுத்துவதையும் அவர்களுக்கு உபகாரம் செய்யாதிருத்தலையும் குறிக்கிறது.
மூன்றாவது : எவ்வித நியாயமான காரணமுமில்லாது அநியாயமாகவும், அத்துமீறியும் ஒருவரை கொலை செய்தல்.
நான்காவது : பொய் சத்தியம் என்பது ' பொய்யென்று தெரிந்துகொண்டே ஒரு விவகாரம் சம்பந்தமாக பொய்யாக சத்தியம் செய்தலைக் இது குறிக்கிறது. 'அல் யமீனுல் கமூஸ்' என இச்சத்தியம் அழைக்கப்படக் காரணம் குறித்த நபரை இந்த சத்தியமானது பாவத்தில் அல்லது நரகில் தள்ளிவிடுவதினலாகும்.