عن أبي بكرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم:
«أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟» ثَلَاثًا، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: «الْإِشْرَاكُ بِاللهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ» وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا، فَقَالَ: «أَلَا وَقَوْلُ الزُّورِ»، قَالَ: فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا: لَيْتَهُ سَكَتَ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2654]
المزيــد ...
அபூபக்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'பாவங்களில் மிகப்பெரியது குறித்து உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?' என்று மூன்று முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள்; 'ஆம் அல்லாஹ்வின் தூதரவர்களே!' எனக் கூறினார்கள். அப்போது, 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரைத் துன்புறுத்தல்' என்று கூறினார்கள். பின்னர் சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதும், (மிகப் பெரிய பாவம்தான்)' என்று கூறினார்கள். இந்த வார்த்தையை கூறுவதை நிறுத்த மாட்டார்களா ? என்று நாம் கூறும் அளவுக்கு அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 2654]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு மிகப் பெரும்பவாங்கள் குறித்து தெரிவித்தார்கள். அதில் அவர்கள் மூன்று பாவங்கள் குறித்து பிரஸ்தாபித்தார்கள் அவை பின்வருமாறு:
முதலாவது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் : அதாவது வணக்க வழிபாடுகளின் வகைகளுள் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாத ஒன்றிற்கு சமர்பித்தல்.மேலும் அல்லாஹ்வின் இறைமைத்துவம் (உலூஹிய்யா) , ருபூபிய்யா மற்றும் அவனின் திருநாமங்கள் பண்புகளில் அல்லாஹ்வை அல்லாஹ் அல்லாதவற்றுடன் நிகராக்குதல் போன்றவற்றை இது குறித்து நிற்கிறது.
இரண்டாவது : பெற்றாருக்கு நோவினை செய்தல் என்பது சொல் மற்றும் செயல் ரீதியான அனைத்து விடயங்கள் மூலமும் பெற்றோரை துன்புறுத்துவதையும் அவர்களுக்கு உபகாரம் செய்யாதிருத்தலையும் குறிக்கிறது.
பொய் பேசுதல் என்பதில் பொய் சாட்சியம் கூறுவதும் அடங்கியுள்ளது. பொய்ச் பேசுதல் என்பது : ஒருவருடைய பொருளாதாரத்தை உரிமையின்றி சுரண்டுவதற்காகவோ, அவருடைய மானத்தில் அத்துமீறுவதற்காகவோ பொய்யாக சோடிக்கப்பட்ட அனைத்து வித வார்த்தை களையும் உள்ளடக்குகின்ற ஒரு பொதுவான சொற் பிரயோகமாகும்.
பொய் பேசுதல் ஒரு அசிங்கமான விடயம் மற்றும் அது சமூகத்தில்; மோசமான தாக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தவே நபியவர்கள் பல முறை எச்சரித்து இவ்வார்த்தையைக் குறிப்பிட்டார்கள். இவ்வாறு பல முறை சொல்வதைக் கேட்ட ஸஹாபாக்கள் நபியவர்கள் மீது கொண்ட பரிவினாலும், அசௌகரியம் ஏற்படக் கூடாது என்பதனாலும் நபியவர்கள் இதனைக் கூறுவதை நிறுத்த மாட்டார்களா என அவர்கள் தங்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டார்கள்.