عَنِ العَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضيَ اللهُ عنهُ قَالَ:
قُلْتُ: يَا رَسُولَ اللهِ، عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ عَزَّ وَجَلَّ. قَالَ: «سَلِ اللَّهَ العَافِيَةَ»، فَمَكَثْتُ أَيَّامًا ثُمَّ جِئْتُ فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ. فَقَالَ لِي: «يَا عَبَّاسُ، يَا عَمَّ رَسُولِ اللهِ، سَلِ اللَّهَ العَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ».
[صحيح لغيره] - [رواه الترمذي وأحمد] - [سنن الترمذي: 3514]
المزيــد ...
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
நான், 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய எனக்கு ஏதாவது கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள்;' என்று கூறினார்கள். சில நாட்களுக்குப் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் கேட்க ஏதாவது ஒன்றை எனக்குக் கற்றுக் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்: 'அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே! இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடம் நல்வாழ்வைக் கேளுங்கள்' என்று என்னிடம் கூறினார்கள்.
[வேறொரு அறிவிப்புடன் இணைந்து சரியாகியது] - [இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது] - [ஸுனன் திர்மிதீ - 3514]
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் தந்தைவழிச் சகோதரர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்கான ஒரு பிரார்த்தனையை தனக்குக் கற்றுக் கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். 'மார்க்க விடயங்களிலும் இம்மை மற்றும் மறுமையிலும் எல்லா வகையான கஷ்டங்களிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தையும்; பாதுகாப்பையும் கேளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கட்டளையிட்டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: சில நாட்களுக்குப் பிறகு, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று எனக்கு ஒரு பிரார்ததனையைக் கற்றுக் கொடுக்கச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரழி) அவர்களின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தி, ' அப்பாஸே! அல்லாஹ்வின் தூதரின் தந்தைவழிச் சகோதரரே!' என்று கூறி, பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை (ஆஃபியத்) கேளுங்கள், அதனால் அவன் உங்களை எல்லா கஷ்டங்களிலிருந்தும் பாதுகாத்து, இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு எல்லா வகையான நன்மைகளையும் வழங்குவான்.