ஹதீஸ் அட்டவணை

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகமாக ' யா முகல்லிபல் குலூப் ஸப்பித் கல்பி அலா தீனிக '- (பொருள்) உள்ளங்களை புரட்டுபவனே! என்னுடைய உள்ளத்தினை உனது மார்க்கத்தில் நிலைத்து இருக்க வைப்பாயாக'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை எனக்கு சீர்செய்து தருவாயாக! அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும், என்னை விட நீ அறிந்தவைத்திருப்பவற்றையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள், பிற்படுத்தியவைகள், மறைத்துக்கொண்டவைகள், பகிரங்கப் படுத்தியவைகள் என அனைத்தையுமே மன்னித்துவிடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா அல்லாஹ்! இவ்வுலகிலும், மறுமையிலும் பாதுகாப்பை நான் உன்னிடம் கேட்கின்றேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா அல்லாஹ்! நலவுகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் உன்னிடம் கேட்கின்றேன். தீமைகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புக் கேட்கின்றேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா அல்லாஹ்! உனது அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும், உனது சோதனைகள் திடீரென வருவதை விட்டும், உனது அனைத்துக் கோபங்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா அல்லாஹ்! கடன் சுமையை விட்டும், எதிரியின் அடக்குமுறையை விட்டும் மேலும், எதிரிகளின் நகைப்பை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'அல்லாஹும்மஹ்தினீ, வ ஸத்தித்னீ' (இறைவா! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாகச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பீராக. அப்போது (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக' என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா தல் ஜலாலி வல் இக்ராம் என்ற வார்த்தையையைப் பற்றிக் கொள்ளுங்கள்."
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்வே! ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது