عن سعد بن أبي وقاص رضي الله عنه قَال: عَادَنِي رسول الله صلى الله عليه وسلم فقال: «اللَّهُمَّ اشْفِ سَعْداً، اللَّهُمَّ اشْفِ سَعْداً، اللَّهُمَّ اشْفِ سَعْداً».
[صحيح] - [متفق عليه واللفظ بنحوه لمسلم]
المزيــد ...

ரஸுல் (ஸல்) அவர்கள் என்னிடம் நோய் விசாரிக்க வந்தார்கள்.அச்சமயம் அன்னார் "அல்லாஹ்வே! ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக.அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக.அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக."என்று கூறினார்கள், என ஸஃத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஸஹீஹானது-சரியானது - புஹாரியும்,முஸ்லிமும் ஒன்றுபட்டது.இதன் வாசகம் முஸ்லிம் அவர்களுக்குரியது

விளக்கம்

ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் சுகவீனமாக இருந்த போது, அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற ரஸூல் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வே! ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக."என்று மூன்று தடவைகள் துஆ செய்தார்கள்.இந்த ஹதீஸ் ஒரு மனிதன் முஸ்லிம் நோயாளியிடம் நோய் விசாரிக்கச் செல்வது நபி வழி என்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றது.மேலும் இது ரஸுல் (ஸல்) அவர்களின் சீரிய குணத்தையும்,அவர்கள் தங்களின் தோழர்களுடன் வைத்திருந்த தொடர்பையும் எடுத்துக் காட்டுகிறது.எனவேதான் நபியவர்கள் தங்களின் தோழர்கள் சுகவீனமாக இருந்த போது அவர்களை நோய் விசாரிக்கச் சென்று அவர்களுக்காக துஆவும் செய்தார்கள். மேலும் நோயாளிக்காக துஆ கேட்பது,நோயாளியின் நோய் குணமடைவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும், எனவே நோயாளியின் பெயரைக் குறிப்பிட்டு "அல்லஹ்வே! இன்னாரின் நோயைக் குணப்படுத்தி வைப்பாயாக"" என்று மூன்று தடவைகள் கூறி அவருக்காக துஆ கேட்பது ஒரு விரும்பத் தக்க செயல் என்பதும் இதன் மூலம் புலனாகிறது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு