ஹதீஸ் அட்டவணை

'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله) என்பதாகும். துஆவில் சிறந்தது அல்ஹம்து லில்லாஹ் ( الحمد لله) என்பதாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஓர் அடியான் ஸுஜூத் செய்து கொண்டிருக்கும் நிலையில்தான் தனது இரட்சகனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான், ஆகவே அந்நிலையில் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஸுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), 'அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), 'லாஇலாஹ இல்லல்லாஹு' (உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை), 'அல்லாஹ் அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) ஆகிய நான்கு வாசகங்களும் அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்கு உரியவைகளாகும். இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் எதுவித குற்றமுல்லை'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'இரண்டு வார்த்தைகள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனுக்கு மிகவும் பிரியத்திற்குரியவையுமாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் தங்குவதற்காக இறங்கி பின்னர் 'அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்' (பொருள் : அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்துப் படைப்புகளின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூறிப் பிரார்த்தித்தால், தங்கிய அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்' (அல்லாஹ் தூயவன்; அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் உதயமாகும் இவ்வுலகைவிடவும் எனக்கு மிகவும் விருப்பமானதாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமானதாகும்.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஓர் மனிதர் தனது வீட்டினுள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு (பிஸ்மில்) கூறினால் ஷைத்தான் தனது நண்பர்களிடத்தில் உங்களுக்கு இரவில் தங்குவதற்கான இடமோ இரவுணவோ கிடையாது என்று கூறுகிறான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகமாக ' யா முகல்லிபல் குலூப் ஸப்பித் கல்பி அலா தீனிக '- (பொருள்) உள்ளங்களை புரட்டுபவனே! என்னுடைய உள்ளத்தினை உனது மார்க்கத்தில் நிலைத்து இருக்க வைப்பாயாக'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள்.உங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள், இவ்வாறு துஆ செய்வதன் மூலம் நீங்கள் அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டு உங்களுக்கு அவன் துஆ ஏற்கின்ற அந்த நேரத்திற்கு உட்பட்டு வேண்டாம்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
"நான் எனது இரட்சகனிடம் பிரார்த்தித்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை" என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
((இரவின் கடைசிப் பகுதியில் இரட்சகனான அல்லாஹ் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
"எனது அடியான் என்னைப் பற்றி எண்ணுகின்ற பிரகாரம் நான் இருப்பேன்.எனவே அவன் எங்கு என்னை நினைவு படுத்துகின்றானோ அங்கு அவனுடன் நான் இருப்பேன்"என்று அல்லாஹ் கூறினான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உங்களில் ஒருவர் உறங்கும் போது ஷைத்தான் அவரது தலையின் பிடரியில் மூன்று முடிச்சுக்களை இடுவான். ஒவ்வொரு முடிச்சின் போதும், 'உனக்கு நீண்ட இரவு உள்ளது. எனவே உறங்கு' எனக் கூறுவான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர எதனையும் அவன் ஏற்கமாட்டான். அல்லாஹ் தூதர்களுக்கு ஏவியதையே விசுவாசிகளுக்கும் ஏவினான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
எனது பெயர் ஒருவனிடம் கூறப்பட்டும், என் மீது ஸலவாத் சொல்லாமல் இருப்பவனே, உண்மையில் கஞ்சனாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உணவை சாப்பிடும் ஒருவர் (அவர் சாப்பிட்டதன் பின்) 'அல்ஹம்து லில்லாஹில்லதி அத்அமனி ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லின் மின்னி வலா குவ்வா என்று கூறுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்' (திக்ரின் கருத்து ) எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே எனக்கு இந்த உணவை அளித்தான். என்னிடமிருந்து எந்தவித சக்தியும் முயற்சியுமின்றியே எனக்கு இதனை அருளினான்;)
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆ தட்டப்படமாட்டாது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா அல்லாஹ்! எனது மார்க்கத்தை எனக்கு சீர்செய்து தருவாயாக! அதுவே எனது விவகாரங்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
என்னுடைய ரப்பே! எனது தவறுகளையும், அறியாமையையும், எனது எல்லா விவகாரங்களிலும் நான் செய்த எல்லைமீறல்களையும், என்னை விட நீ அறிந்தவைத்திருப்பவற்றையும் மன்னித்து விடுவாயாக! யா அல்லாஹ்! எனது பாவங்களையும், நான் வேண்டுமென்று செய்தவற்றையும், எனது அறியாமையையும், எனது பரிகாசத்தையும் மன்னித்துவிடுவாயாக! அவை அனைத்துமே என்னிடம் உள்ளன. யா அல்லாஹ்! நான் முற்படுத்தியவைகள், பிற்படுத்தியவைகள், மறைத்துக்கொண்டவைகள், பகிரங்கப் படுத்தியவைகள் என அனைத்தையுமே மன்னித்துவிடுவாயாக! நீயே முற்படுத்துபவன்! நீயே பிற்படுத்துபவன்! நீ அனைத்திற்கும் சக்தியுள்ளவன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா அல்லாஹ்! இவ்வுலகிலும், மறுமையிலும் பாதுகாப்பை நான் உன்னிடம் கேட்கின்றேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா அல்லாஹ்! நலவுகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் உன்னிடம் கேட்கின்றேன். தீமைகளில், உடனடியான, தாமதமான, நான் அறிந்த, அறியாத அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புக் கேட்கின்றேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா அல்லாஹ்! உனது அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும், உனது சோதனைகள் திடீரென வருவதை விட்டும், உனது அனைத்துக் கோபங்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா அல்லாஹ்! கடன் சுமையை விட்டும், எதிரியின் அடக்குமுறையை விட்டும் மேலும், எதிரிகளின் நகைப்பை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் காலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் மாலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நிச்சயமாக உங்களின் இரட்சகன் நாணமுடையவனும்,கொடை வள்ளலுமாவான் எனவே தன் அடியான் அவனின் இரண்டு கைகளையும் தன்னிடம் உயர்த்துகின்ற போது அதனை வெறுமையாக திருப்பி விடுவதையிட்டு அவன் வெற்கப்படுகின்றான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஒரு கூட்டம் ஓரிடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூறாமலும்ந நபி (ஸல்) அவர்களின் மீதுஸலவாத் கூறாமலும் இருந்தால் கியாமத் நாளில்அவர்களுக்குஅது கைசேதமாக அமையும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'அல்லாஹும்மஹ்தினீ, வ ஸத்தித்னீ' (இறைவா! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாகச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பீராக. அப்போது (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக' என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்' என்று சொன்னார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யார், 'பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் பில் அர்ழி வலா பிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம் (எவனுடைய பெயர் இருக்கும் போது, இவ்வானத்திலோ, பூமியிலோ எந்தவொன்றும் தீங்கை ஏற்படுத்தமாட்டாதோ, அந்த அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (காலையை, மாலையை அடைகின்றேன்) அவன் செவிமடுப்பவனாகவும், அறிந்துள்ளவனாகவும் இருக்கின்றான்) என்று மூன்று தடவை கூறுகின்றாரோ, அவர் காலையை அடையும் வரை, அவருக்கு எந்த திடீர் சோதனைகளும் ஏற்படமாட்டாது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, 'இன்னின்னவற்றைப் படைத்தவன் யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், 'உன் இறைவனைப் படைத்தவன் யார்?' என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்')
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அவன்தான் ஹின்ஸப் எனப்படும் ஷைத்தான், அவன் குழப்புவதை நீர் உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிவிட்டு, உமது இடது பக்கத்தில் மூன்று விடுத்தம் துப்பிவிடு'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யா தல் ஜலாலி வல் இக்ராம் என்ற வார்த்தையையைப் பற்றிக் கொள்ளுங்கள்."
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்வே! நீயே எனக்குப் பக்கபலம்,நீயே எனக்கு உதவி செய்கின்றவன்,உனது உதவியைக் கொண்டே நான் நடமாடுகிறேன்,உனது உதவியைக் கொண்டே நான் பாய்கின்றேன்.மேலும் உனது உதவியைக் கொண்டே நான் சண்டையிடுகின்றேன்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. அல்லது அவை அரிதாக நிராகரிக்கப்படுகின்றன. அவையாவன அதான் சொல்லும் போது கேட்கும் துஆவும்,யுத்தத்தில் சிலர் சிலரோடு மோதிக் கொள்ளும் போது கேட்கும் துஆவுமாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
என்றும் நிலைத்திருக்கும் நல்லமல்கள்لَا إلَهَ إلَّا اللَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَاَللَّهُ أَكْبَرُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاَللَّهِ எனும் வாசகங்களாகும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அல்லாஹ்வே! ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக. அல்லாஹ்வே ஸஃதை குணப்படுத்தி வைப்பாயாக.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது