عن أبي مالك الحارث بن الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «الطهور شطر الإيمان، والحمد لله تملأ الميزان، وسبحان الله والحمد لله تملآن -أو تملأ- ما بين السماء والأرض، والصلاة نور، والصدقة برهان، والصبر ضياء، والقرآن حجة لك أو عليك، كل الناس يغدو: فبائعٌ نفسَه فمُعتِقُها أو مُوبِقها».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) கூறினார்கள் : "சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்பது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله” (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله” ஆகிய இரண்டுமோ அல்லது ஒவ்வொன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும், பொறுமை பிரகாசமாகும். திருக்குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும். தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் விடுகின்றான். ஒன்று அதற்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான்".
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் சுத்தம் ஈமானின் பாதியெனக் கூறியுள்ளார்கள். இங்கு சுத்தம் என்பது சுத்தமாவதையே குறிக்கின்றது. சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் சாதனத்திற்கு அரபியில் தஹூர் எனப்படுகின்றது. உள்ளம், வெளியுறுப்புக்கள் அனைத்தையும் சுத்தம் செய்வதே இங்கு நாடப்பட்டுள்ளது. அசுத்தங்களைத் தவிர்ந்து,தொடக்கை நீக்கவுதன் மூலம் வெளிச்சுத்தமும், இணைவைப்பு, உள்ளம் சார்ந்த நோய்களிலிருந்து தவிர்ந்து கொள்வதன் மூலம் உளச்சுத்தமும் ஏற்படுகின்றது. ஈமானின் பாதி என்பது தொழுகையின் பாதி என்பதைக் குறிக்கின்றது. ஏனெனில் சுத்தமின்றித் தொழுகை ஏற்கப்படமாட்டாது. மேலும் 'الحمد لله” நன்மைத் தட்டை நிரப்புமெனவும் நபியவர்கள் கூறினார்கள். மேற்கண்ட வார்த்தை அல்லாஹ்வை நேசித்து, மகத்துவப்படுத்துவதுடன், அவனது பரிபூரண பண்புகளால் அவனைப் புகழ்ந்து வரணிப்பதைக் குறிக்கின்றது. மறுமையில் செயல்கள் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டை இது நிரப்புகின்றது. 'سبحان الله” என்பது அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியில்லாத அனைத்து குறைகள், மற்றும் படைப்பினங்களுக்கு அவன் ஒப்பாவதை விட்டும் தூய்மைப்படுத்தி, துதிப்பதாகும். மேற்கண்ட இரு வார்த்தைகளுமோ, அவை ஒவ்வொன்றுமோ வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. அதாவது ஐநூறு வருடங்கள் நடந்து செல்லுமளவு பாரிய இடைவெளியை இந்த ஓரிரு வார்த்தைகள் நிரப்பி விடுகின்றன. ஏனெனில் அல்லாஹ்வின் சிறப்பு வரையறைக்கு அப்பாற்பட்டதாகும். தொழுகை ஈருலகிலும் ஓர் அடியானுக்கு ஒளியாகும். தர்மம் அதனை வழங்குபவனின் ஈமானிற்கு சாட்சியாக உள்ளது. ஏனெனில் பணத்தின்பால் ஈர்க்கப்பட்டே ஆன்மாக்கள் இயல்பில் படைக்கப்பட்டுள்ளன. இப்பணத்தை மனப்பூர்வமாக வழங்கும் போது அவனது ஈமானிற்கு இது ஒரு பலமான அத்தாட்சி என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பொறுமையின் மூன்று வகைகளான நன்மையைச் செய்வதில் பொறுமை, பாவங்களைத் தவிர்ப்பதில் பொறுமை, சோதனைகளின் போதுள்ள பொறுமை ஆகிய அனைத்து வகைகளுமே அதனுடையோருக்கு சரியான பாதையைக் காட்டும் பிரகாசமாகும். "c2">“அல்குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்”, அல்குர்ஆன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் பேச்சாகும். இது நூலுருவில் இரு அட்டைகளுக்கு மத்தியில் உள்ளது, அதனை ஓதுபவர் அல்லாஹ்வுடன் உரையாடிக் கொண்டிருப்பவரைப் போன்றவராவார். அது உமக்கு சார்பாகவோ எதிராகவோ இருக்கும். அதனை நம்பி, அதிலுள்ளவற்றை உண்மைப்படுத்தி, அதன் ஏவல்களை எடுத்தும், விலக்கல்களைத் தவிர்ந்தும் நடக்கும் போது மறுமையில் அது உமக்கு சார்பாக வரும். அதனை பற்றி, மனனமிட்டு, அமுல்படுத்தாமல் புறக்கணித்து, அது ஏவும் தொழுகையைப் புறக்கணித்து, அதன் ஏவல், விலக்கல்களுக்கு மாற்றம் செய்தால் அது உமக்கு எதிராக வரும். "c2">“தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும்” அதாவது காலையில் அனைத்து மனிதர்களும் வாழ்வாதாரத்தைத் தேடிச் செல்கின்றனர். இருப்பினும் சிலருடைய தேடல் அவருக்கு சாதகமாகும், சிலருக்கு பாதகமாக அமைகின்றது.அனைவருமே முயற்சிக்கின்றனர். ஒன்றோ தனது ஆன்மாவை அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து அவனது நரகத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றான், அல்லது பாவங்கள், குற்றச் செயல்கள், தீமைகளில் ஈடுபடுவதன் மூலம் ஷைத்தானுக்கு தன்னை அர்ப்பணித்து நரகில் அழித்துக் கொள்கின்றான்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இது நபி (ஸல்) அவர்களின் ஒருங்கிணைந்த பொருளைத் தரும் சொற்றொடர்களில் ஒன்றாகும்.
  2. உள்சுத்தம், வெளிச்சுத்தம் என்பவற்றின் முக்கியத்துவம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  3. அல்லாஹ்வை நினைவுகூர்வதின் சிறப்பு.
  4. இலகுவான சில வார்த்தைகளுக்கு பாரிய கூலியை வைத்துள்ள அல்லாஹ் இரக்கமுள்ளவன்.
  5. தொழுகையைப் பேணிவருவதன் முக்கியத்துவம், அது ஈருலகிலும் அடியானுக்கு ஒளியாகும்.
  6. உண்மையான ஈமானிற்கு தர்மம் ஆதாரமாகவுள்ளது.
  7. அல்குர்ஆன் உமக்கு எதிராக அல்லாமல், சார்பான ஆதாரமாக இருக்க அதனை உண்மைப்படுத்தி, அதன் படி செயல்படுவது அவசியமாகும்.
  8. உண்மையான சுதந்திரம் அல்லாஹ்விற்குக் கட்டுப்படுவதே தவிர மனிதன் தான் விரும்பியதையெல்லாம் செய்யும் விதத்தில் ஆன்மாவை அவிழ்த்து விடுவதல்ல.
  9. மனிதன் நன்மையோ, தீமையோ ஏதாவதொன்று செய்து கொண்டுதான் இருக்குகிறான்.
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு