ஹதீஸ் அட்டவணை

இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியனவாகும்''
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
' உங்களில் தொடக்கு ஏற்பட்ட ஒருவரின்; தொழுகையை வுழூச் செய்யும் வரையில் அல்லாஹ் ஏற்க மாட்டான்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'பல் துலக்குவது வாயை சுத்தப்படுத்தும், இறை திருப்தியைப் பெற்றுத் தரும்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
''அழகிய முறையில் வுழூ செய்பவரின் (சிறு)பாவங்கள் நகங்களின் கீழ் உட்பட உடலின் எல்லாப் பகுதியிலிருந்தும் வெளியேறி விடுகின்றன''
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கப்ரில் பெரும்பான்மையான வேதனை அதன் காரணமாகத் தான்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
(சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் உண்டு. ஆகவே வுழுவை பரிபூரணமாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அதைவிட்டுவிடுவீராக, கால்கள் இரண்டும் வுழூவுடன் இருக்கும் நிலையில்தான் காலுறைகளை அணிந்தேன்' என்று கூறிவிட்டு
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அது ஒரு நரம்பு நோய், மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்குத் தொழுகையை விட்டுவிட்டு, பின்னர் குளித்து தொழுது கொள்' என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் தம் நாசிற்கு தண்ணீர்ச் செலுத்தி பின்னர் அதை சிந்தட்டும். மலசலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
((நீங்கள் மலம் கழிக்கச் சென்றால், கிப்லா (கஃபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; (அதன் திசையில்) முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
((உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, மறை உறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத் தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.))
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் நாய் நீர் அருந்தினால் அதனை ஏழு
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸி' எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். பொருள்: யா அல்லாஹ்! உன்னிடம் ஷைத்தான்களில் ஆண் மற்றும் பெண்ணகளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
பெருந்தொடக்கிற்காக குளிக்கும் முறை
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பி;ன்னர் அவர்கள் குளிப்பார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நான் அதிகமாக 'மதி' எனும் இச்சை (ஆசை)நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி வினவுவவதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால் அவர்களிடம் இது பற்றி கேட்டு வருவதற்கு அல்மிக்தாத் இப்னுல் அஸ்வத் அவர்களை அனுப்பினேன். அவர் சென்று கேட்டபோது; 'அவர் தனது ஆண்குறியைக்(ஆணுறுப்பை) கழுவிவிட்டு வுழு செய்யட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று வுழூச் செய்துகாட்டினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
அவர்கள் "தமது கையை பூமியில் ஓர் அடி அடித்து விட்டு,தமது வலக் கரத்தால் இடது கையையும் இரு முன்னங்கைகளையும் (இரு கைகளால்) தமது முகத்தையும் தடவி விட்டு, இப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமான தாயிருந்திருக்கும் என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உங்களில் ஒருவர் உறங்கும் போது ஷைத்தான் அவரது தலையின் பிடரியில் மூன்று முடிச்சுக்களை இடுவான். ஒவ்வொரு முடிச்சின் போதும், 'உனக்கு நீண்ட இரவு உள்ளது. எனவே உறங்கு' எனக் கூறுவான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு (நேரத் தோடு) செல்பவர், ஓர் ஒட்டகத்தை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'அதன் நீர் பரிசுத்தமானது, அதில் இறப்பவைகளும் ஹலாலானவையே' என்று கூறினார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நீர் 'குல்லதைன்' அளவை எட்டிவிட்டால், அது அழுக்குகளை சுமக்கமாட்டாது.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உங்களில் ஒருவர் தனது உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தால், மூன்று தடவை மூக்கை சீறிவிடட்டும். ஏனெனில் ஷைத்தான் அவரது மூக்கினுள் இரவில் தரிக்கின்றான்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணிந்துகொண்டால், அவற்றுடனேயே தொழட்டும். அவற்றின் மீது மஸ்ஹு செய்துகொள்ளட்டும். பின்பு – அவர் நாடினால் - குளிப்புக் கடமையாகிவிட்டாலே தவிர, அதனைக் கழற்றவேண்டியதில்லை
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழுச் செய்வார்கள்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை ஒவ்வெரு தடவையும் கழுவுபராக இருந்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை இவ்விரு முறை கழுவி வுழு செய்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'உங்களில் ஒருவருக்கு வயிற்றில் ஏதாவது (சத்தம்) கேட்டு ஏதும் காற்று வெளியேறியதா இல்லையா எனும் சந்தேககம் ஏற்பட்டால், அவர் சத்தத்தைக் கேட்காத அல்லது காற்று வெளியேறியதாக உணராத வரை (தொழுகையை முறித்து) பள்ளியை விட்டு வெளியேற வேண்டாம்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஏழு நாற்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வந்தேன். அப்போது நபியவர்கள் நீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளித்துவருமாறு எனக்குப் பணித்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் ஒரு கூட்டத்தினரால் மண் மற்றும் குப்பை கூலங்கள் வீசப்படும் இடத்திற்குச் சென்று நின்ற நிலையில் சிறுநீர் கழித்தார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஒரு முஸ்லிம் அடியான் அல்லது ஒரு விசுவாசி வுழூ செய்யும் போது அவன் தனது முகத்தைக் கழுவியதும் அந்தத் தண்ணீருடன் அல்லது இறுதித் துளி தண்ணீருடன் அவன் தன் இரு கண்களாலும் பார்த்த பாவங்கள் யாவும் வெளியேறி விடும்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது