+ -

عن أبِي هريرة رضي اللَّه عنه: سمعتُ النبِيّ صلى الله عليه وسلم يقول:
«الفِطْرَةُ خمسٌ: الخِتَانُ والاستحدادُ وقصُّ الشَّارِبِ وتقليمُ الأظفارِ وَنَتْفُ الآبَاطِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5891]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
"இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியனவாகும்''.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 5891]

விளக்கம்

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலும் மற்றும் நபிமார்களின் மரபுகளிலும் உள்ள ஐந்து விடயங்களை தெளிவுபடுத்துகிறார்கள்; அவை பின்வருமாறு :
முதலாவது : விருத்த சேதனம்; விருத்தசேதனம் என்பது ஆணுறுப்பின் மேல் பகுதியில் உள்ள தோலை கத்தரிவிடுதல். பெண் பிறப்புறுப்பில் உறவு கொள்ளும் இடத்திற்கு மேலே உள்ள பகுதியை நீக்கி விடுதல்.
இரண்டாவது: மர்ம உறுப்பின் மேலே உள்ள பகுதியில் காணப்படும் முடிகளை மழித்தல்.
மூன்றாவது: மீசையை கத்தரித்தல் -ஒட்ட வெட்டுதல்- அதாவது ஆணின் உதட்டின் மேல் பகுதி தெரியுமளவிற்கு மேல் உதட்டுப்பக்கத்தில் வளரும் முடிகளை கத்தரிப்பதை குறிக்கிறது.
நான்காவது : நகங்களை களைதல்.
ஐந்தாவது :அக்குள் முடிகளை களைதல்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية التشيكية Малагашӣ Итолёвӣ Урумӣ Канада الأوكرانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ்வின் தூதர்களின் இயற்கை மரபுகளை -வழிமுறைகளை அல்லாஹ் விரும்பி வரவேற்போதோடு அவற்றை கடைப்பிடித்து ஒழுகுமாறும் கட்டளையிடுகிறான். அவை யாவும் முழுமை, தூய்மை, அழகு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.
  2. இயற்கை மரபுகளில் அலட்சியம் கொள்ளாது பேணிநடப்பது மார்க்கம் வழிகாட்டிய விடயமாகும்.
  3. இவ்விடயங்களைக் கடைபிடிப்பதால் பலவிதமான ஆன்மீக, லௌகீக பயன்பாடுகள் உள்ளன. அழகிய தோற்றம், உடற்சுத்தம், ஆன்மீக சுத்தத்திற்கான பேணுதல், நிராகரிப்பாளர்களின் கலாச்சாரத்திற்கு மாறுசெய்தல், இறைக்கட்டளையை எடுத்து நடத்தல் போன்றன அவற்றுள் சிலதாகும்.
  4. வேறு அறிவிப்புகளில் -ஹதீஸ்களில்- இங்கே குறிப்பிடப்பட்ட ஐந்து விடயங்களுக்கு மேலதிகமாக தாடி வளர்த்தல், மிஸ்வாக் செய்தல் போன்ற இவை அல்லாத பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.