عَنْ حُذَيْفَةَ رضي الله عنه قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 245]
المزيــد ...
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 245]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகம் மிஸ்வாக் செய்பவர்களாகவும் அதனை வலியுறுத்துபவர்களாகவும் இருந்தார்கள். பல்துலக்குவது –மிஸ்வாக் செய்வது- சில வேளைகளில் வலியுறுத்தப்பட்ட விடயமாகும் அவற்றில் : இரவில் தூங்கி எழும்பினால் பல்துலக்குவது. அந்த நேரத்தில் நபியவர்கள் அராக் குச்சியால் -மிஸ்வாக்- பல்லை துலக்கி சுத்தம் செய்பவர்களாக இருந்தார்கள்.