عَنْ أَبِي هُرَيْرَةَ رضي لله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ» أَوْ قَالَ: «غَيْرَهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1469]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
'ஒரு முஃ மினான ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (மனைவியை)வெறுக்க (வேண்டாம்.) அவளது ஒரு குணத்தை வெறுத்தால் அவளின் வேறொரு குணத்தை (விடயத்தை) பொருந்தி அங்கீகரிக்கலாம்.'
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 1469]
கணவன் தன் மனைவியை அவளுக்கு அநியாயம் இழைத்து கைவிட்டு புறக்ணிக்கும் நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு தன் மனைவியை வெறுப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடுத்தார்கள். நிச்சயமாக மனிதன் குறை உடனே படைக்கப்பட்டுள்ளான். அவளிடமிருந்து வெளிப்படும் கெட்ட, மோசமான குணமொன்றை வெறுத்தால், அவளிலே காணப்படும் வேறொரு நல்ல குணத்தை - பொருந்தி ஏற்றுக் கொள்வான். அத்துடன் அவனால் பொறுந்திக்கொள்ள முடியாத மோசமான பண்புகளில் பொறுமையை கடைப்பிடிப்பான். அவ்விதம் அவன் பொருமையை கடைபிடிப்பிடிக்கும் அந்த மோசமான பண்பை வெறுப்பதானது அவளை பிரிந்து வாழ்வதற்குரிய அளவிற்கு தூண்டுவதாக அமைந்துவிடுதல் ஆகாது.