+ -

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ» فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: يَا رَسُولَ اللَّهِ، أَفَرَأَيْتَ الحَمْوَ؟ قَالَ: «الحَمْوُ المَوْتُ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5232]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
'பெண்களுக்குள் நுழைவதை நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன்.' என்று நபியவர்கள் கூறினார்கள். அப்போது, அன்ஸாரிகளில் ஒருவர், 'கணவன் புறத்தால் வரும் ஆண் உறவுகள் (கணவனின் சகோதரர் போன்றவர்கள்) நுழைவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?' என்று கேட்க, 'கணவன் புறத்தால் வரும் அந்த உறவு தான் மரணமே' என்று கூறினார்கள் நபியவர்கள்.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 5232]

விளக்கம்

அந்நியப் பெண்களுடன் கலந்து இருப்பதைத் தடுக்கும் விதமாக நபியவர்கள், 'நீங்கள் பெண்கள் இருக்கும் இடத்தில் நுழையாமலும், பெண்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் நுழையாமலும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.
அப்போது அன்ஸாரிகளில் ஒருவர், 'கணவனின் உறவுகளில், ஒரு வேளை இப்பெண் திருமணம் முடிக்காமல் இருந்திருந்தால், திருமணம் செய்வதற்கான அனுமதியுள்ள, கணவனின் சகோதரன், அவரது சகோதரனின் மகன், அவருடைய சிறிய தந்தை, சிறிய தந்தையின் மகன், அவரது சகோதரியின் மகன் போன்றோர் பற்றி என்ன சொல்கின்றறீர்கள்?' என்று கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள், 'மரணத்தை எச்சரிக்கையாக இருப்பது போன்று, அவர்களை எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். ஏனெனில், கணவனின் உறவுகளோடு தனிமையில் இருப்பதென்பது, குழப்பம் மற்றும் மார்க்கத்தில் அழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, கணவனின் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் அல்லாத உறவுகள் ஏனைய அன்னிய ஆண்களை விடத் தடுக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில், அன்னிய ஆண்களுடன் தனிப்பதை விட, கணவனின் உறவுகளுடன் தனிப்பதே அதிகமாக நிகழ்கின்றது. ஏனையோரை விட, அவர்களாலே தீங்குகள் நடக்க வாய்ப்புள்ளது. குழப்பங்கள் அவர்களால் நடப்பதே அதிக வாய்ப்பானது. ஏனெனில், எந்தவொரு எதிர்ப்பும் இன்றி அவர்களால் பெண்ணை அடையவும், தனிமையில் இருக்கவும் முடியும். அவ்வாறு தனிப்பது சிலவேளை தவிர்க்கமுடியாமல் கட்டாயமாகவும் நடக்கும். ஏனெனில், அதில் சற்றுக்கவனயீனம் உள்ளது. எனவே தான் பெண்கள் தனது கணவனின் சகோதரர்களோடு தனித்து விடுகின்றார்கள். அதனால், இதன் அறுவறுப்பு நிலை மற்றும் பாதிப்புக்கள் காரணமாக, இது மரணத்தை ஒத்ததாக உள்ளது. ஆனால், அன்னிய ஆணின் விடயம் அவ்வாறல்ல. அவனது விடயத்தில் எச்சரிக்கையாவே இருந்துகொள்வர்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அன்னியப் பெண்கள் இருக்கும் இடத்தில் நுழைவது மற்றும் அவர்களாடு தனிப்பது ஆகியவை, விபச்சாரம் போன்றவை நடப்பதைத் தவிர்க்கும் விதமாகத் தடுக்கட்டுள்ளது.
  2. இது, பெண்ணின் மஹ்ரம்கள் அல்லாத, கணவனது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் போன்ற அனைவருக்கும் பொதுவான சட்டமாகும். அதேநேரம், இங்கு 'நுழைதல்' என்பது, தனிமையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
  3. தீமைகளில் வீழ்ந்தவிடுவதைத் தவிர்க்கும் நோக்கில், தவறுகள் நடக்க வாய்ப்புள்ள அனைத்து இடங்களையும் விட்டும் விலகி இருத்தல்.
  4. இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : 'அஹ்மா' என்பது (ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள, 'ஹமு' என்ற சொல்லின் பன்மை) பெண்ணின் கணவனின் உறவுகளான, அவனது தந்தை, சிறிய தந்தை, சகோதரன், சகோதரனின் மகன் மற்றும் சிறிய தந்தையின் மகன் போன்றேரைக் குறிக்கும் என்பதிலும், 'அக்தான்' என்பது, ஒரு ஆணுக்கு மனைவியின் தரப்பால் வரும் உறவுகளையும், 'அஸ்ஹார்' என்பது, இரு விதமான உறவுகளையும் குறிக்கும் என்பதிலும் மொழி அறிஞர்கள் அனைவரும் ஒருமித்துள்ளனர்.
  5. இங்கு கணவன் தரப்பு உறவுகள், மரணத்திற்கு ஒப்பாக்கப்பட்டுள்ளது பற்றி இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : அரபிகள், வெறுப்புக்குரிய அம்சங்களை மரணத்திற்கு ஒப்பாக்குவார்கள். அதில் உள்ள பொறுத்தப்பாடு என்வென்றால், அவ்வாறு பாவம் நிகழ்ந்துவிட்டால், அங்கு மார்க்கம் மரணித்துவிடுகின்றது. அந்தப் பாவம் நடந்து விட்டால், அவ்வாறு தனித்தவர் கல்லெறிந்து கொல்லப்பட்டு மரணித்து விடுகின்றார். கணவன் ரோஷம் கொண்டு அப்பெண்ணைத் தலாக் கூறிவிட்டால், அவள் கணவனைப் பிரிந்து நாசமாகி விடுகின்றாள்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية الموري Малагашӣ Урумӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு