عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ أَنَّهُ قَالَ: أَقْبَلْتُ أَقُولُ مَنْ يَصْطَرِفُ الدَّرَاهِمَ؟ فَقَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللهِ وَهُوَ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رضي الله عنهما: أَرِنَا ذَهَبَكَ، ثُمَّ ائْتِنَا، إِذَا جَاءَ خَادِمُنَا، نُعْطِكَ وَرِقَكَ، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: كَلَّا، وَاللهِ لَتُعْطِيَنَّهُ وَرِقَهُ، أَوْ لَتَرُدَّنَّ إِلَيْهِ ذَهَبَهُ، فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْوَرِقُ بِالذَّهَبِ رِبًا، إِلَّا هَاءَ وَهَاءَ، وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا، إِلَّا هَاءَ وَهَاءَ، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا، إِلَّا هَاءَ وَهَاءَ، وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا، إِلَّا هَاءَ وَهَاءَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1586]
المزيــد ...
மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் "(எம்மிடமுள்ள தங்கத்தை) வெள்ளி நாணயத்திற்கு மாற்றித் தருபவர் யார்?" என்று கேட்டபடி வந்தேன். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்கு அருகிலிருந்த தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள், "எங்கே) உமது தங்கத்தைக் காட்டும். அதைக் கொண்டு வாரும்! எம் ஊழியர் (வெளியூரிலிருந்து) வந்ததும் அதற்குரிய வெள்ளியைத் தருகிறோம்" என்று கூறினார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு வெள்ளியை (உடனடியாக)க் கொடுத்துவிடு. அல்லது அவரது தங்கத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீத்தம் பழத்திற்குப் பேரீத்தம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 1586]
மாலிக் பின் அவ்ஸ்; என்ற தாபிஈ அவர்கள், தன்னிடம் சில தங்க தீனார்கள் இருந்ததாகவும், அவற்றை வெள்ளி திர்ஹம்களுக்கு மாற்றிக்கொள்ள விரும்பியதாகவும் கூறுகின்றார்கள். அப்போது தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், 'உங்கள் தீனார்களைத் தாருங்கள் பார்க்கலாம்' என்று கூறினார்கள். பின்பு அவர்கள் வாங்குவதாக முடிவெடுத்துவிட்டு, 'எமது பணியாள் வந்த பின்னர் வாருங்கள், நாம் உங்களுக்கு வெள்ளி திர்ஹம்களைத் தருவோம்' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் அந்த சபையில் இருந்தார்கள். அப்போது அவர்கள் இந்த வியாபார முறையைக் கண்டித்து, அபூ தல்ஹா இப்போதே அந்த வெள்ளியைக் கொடுக்கவேண்டும். அல்லது தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்று சத்தியமிட்டுக் கூறிவிட்டுக் காரணத்தையும் விளக்கினார்கள். அதாவது, தங்கத்திற்கு வெள்ளியை விற்பதாக இருந்தாலும், வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதாக இருந்தாலும், உடனுக்குடனே விற்கவேண்டும். அவ்வியாபாரம் தடுக்கப்பட்ட வட்டியாகவோ, பிழையான வியாபாரமாகவோ இருக்கக்கூடாது. எனவே, தங்கத்தை தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும் உடனுக்குடன் விற்று, அவ்விடத்திலேயே மாற்றிக் கொள்ளவேண்டும். தொலி நீக்கப்பட்ட கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, பேரீத்தம்பழம் ஆகியவையும், ஒரே அளவில் நிறுக்கப்பட்டு, அல்லது ஒரே அளவாக அளக்கப்பட்டு, உடனுக்குடன் விற்கப்படவேண்டும். அவற்றில் எந்தவொன்றும் தவணை பிற்படுத்தி விற்க முடியாது. பொருட்களை மாற்றிக் கையகப் படுத்திக்கொள்ள முன்னர், பிரிந்து செல்ல முடியாது.