عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:
«تَعَاهَدُوا هَذَا الْقُرْآنَ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَلُّتًا مِنَ الْإِبِلِ فِي عُقُلِهَا».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 791]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
இந்தக் குர்ஆனை மனனமிட்டு (அதை ஓதி ) பேணி வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) மறந்து விடக் கூடியதாகும்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 791]
இந்த ஹதீஸில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்குர்ஆனை மனனமிட்ட ஒருவர் அது மறந்து விடாதிருக்க தொடரந்தும் ஓதி வருமாறு கட்டளைப் பிரப்பித்துள்ளார்கள். இதனை நபியவர்கள் கட்டிவைக்கப்பட்ட ஒட்டகை அவிழ்த்து விடப்பட்டதும் எவ்வளவு வேகமாக ஓடுமோ அதைவிடவும் மிகவும் வேகமாக அல்குர்ஆன் மறந்துவிடும் என்று குறிப்பிடுகிறார்கள். ஆகவே அதனைப்பேணி ஓதி வந்தால் அது அவருடன் இருக்கும், இல்லாது விட்டால் அவறிடமிருந்து மறைந்து விடும்.