عن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «مَنْ قَرَأ حَرْفاً مِنْ كِتاب الله فَلَهُ حَسَنَة، والحَسَنَة بِعَشْرِ أمْثَالِها، لا أقول: ألم حَرفٌ، ولكِنْ: ألِفٌ حَرْفٌ، ولاَمٌ حَرْفٌ، ومِيمٌ حَرْفٌ».
[صحيح] - [رواه الترمذي]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும், அந்த ஒரு நன்மை பத்து மடங்காகும். الم என்பது ஓரெழுத்து எனக் கூற மாட்டேன், மாறாக அதில் ا ஓரெழுத்து, ل ஓரெழுத்து, م ஓரெழுத்தாகும்".
ஸஹீஹானது-சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓரெழுத்தை ஓதும் ஒரு முஸ்லிமுக்கு அந்த ஓரெழுத்துக்குக் கூலியாக பத்து நன்மைகள் வழங்கப்படுவதாக நபியவர்களைத் தொட்டும் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள். "الم என்பது ஓரெழுத்து எனக் கூற மாட்டேன்" என்றால் அந்த மூன்றெழுத்துக்களின் கூட்டு ஓரெழுத்தெனக் கூற மாட்டேன். மாறாக அதில் ا ஓரெழுத்து, ل ஓரெழுத்து, م ஓரெழுத்தாகும் என்பதே அர்த்தமாகும். எனவே அதனை ஓதியவருக்கு முப்பது நன்மைகள் வழங்கப்படுகின்றன. இது பாரிய ஓர் அருட்கொடையாகவும், பெரிய கூலியாகவும் உள்ளது. எனவே அல்குர்ஆன் ஓதுவதை அதிகப்படுத்துவது அவசியமாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. குர்ஆன் ஓதுவதை ஆர்வமூட்டல்.
  2. ஓதக்கூடிய ஒவ்வோர் எழுத்துக்கும் பன்மடங்கு கூலிகள் உள்ளன.
  3. எழுத்து என்பதின் அர்த்தத்தையும், அதற்கும் வார்த்தைக்கும் இடையிலுள்ள வேறுபாட்டையும் விளக்குதல்.
  4. அடியார்களுக்குக் கூலிகளைப் பன்மடங்காக்குவதன் மூலம் அல்லாஹ்வின் அருள், மற்றும் தயாளத்தின் விசாலம் தெளிவாகின்றது.
  5. அல்லாஹ்வின் பேச்சு எழுத்து மற்றும் ஓசையைக் கொண்டதாகும். என்பதை ஏற்றுக் கொள்ளல்.
மேலதிக விபரங்களுக்கு