ஹதீஸ் அட்டவணை

இந்தக் குர்ஆனை மனனமிட்டு (அதை ஓதி ) பேணி வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) மறந்து விடக் கூடியதாகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவராவார்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'உங்கள் வீடுகளைக் அடக்கஸ்தளங்களாக ஆக்கிவிடாதீர்கள், நிச்சயமாக ஷைதான் ஸூரா பகரா ஓதப்படும் வீட்டைவிட்டும் விரண்டோடுகின்றான்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமானதாகும்.'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'யார் அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும், அந்த ஒரு நன்மை பத்து மடங்காகும்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
'மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாயோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று அவரிடம் கூறப்படும்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அவர்கள் அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? என (மீண்டும்) கேட்டார்கள். நான் அல்லாஹு லாஇலாஹ இல்லா{ஹவல் ஹய்யுல் கய்யூம் எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம் என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல் முன்திரே! என்றார்கள்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து அதில் ஊதுவார்கள் பின் அதில், குல் ஹுவல்லா அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது