عن عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:
«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 5027]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :
'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவராவார்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 5027]
முஸ்லிம்களில் மிகவும் சிறப்புக்குறியவரும், உயர் அந்தஸ்த்தையும் பெற்றவர் யார் என்பதை நபியவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்கள். அவர் யாரென்றால் அல்குர்ஆன் ஓதி மனனம் செய்து அழகிய முறையில் தர்த்தீலாக ஓதி, அதனை விளங்கி தானும் அமல் செய்வதுடன் அல்குர்ஆனிய கலைகளை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவராவார்.