+ -

عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«قُلِ اللهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي، وَاذْكُرْ بِالْهُدَى هِدَايَتَكَ الطَّرِيقَ، وَالسَّدَادِ سَدَادَ السَّهْمِ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2725]
المزيــد ...

அலீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இவ்வாறு கூறினார்கள் :
'அல்லாஹும்மஹ்தினீ, வ ஸத்தித்னீ' (இறைவா! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாகச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பீராக. அப்போது (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக' என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2725]

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், அல்லாஹ்விடம் பின்வருமாறு பிரார்த்தித்துக் கேட்குமாறு கூறுகின்றார்கள் : யா அல்லாஹ்! எனக்கு நல்வழி காட்டுவாயாக! என்னை நேர்வழிப்படுத்துவாயாக! மேலும், நேர்மையானதைச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக! அதில் எனக்கு அருள் புரிவாயாக! எனது எல்லா விவகாரங்களிலும் சரியானவனாக என்னை ஆக்கிவிடுவாயாக!
ஹுதா என்பது, சத்தியத்தைப் பொதுவாகவும், விளக்கமாகவும் அறிந்துகொள்வதோடு, உள்ளத்தாலும், உறுப்புக்களாலும் அதனை நடைமுறைப்படுத்த அருள்புரியப்படுவதுமாகும்.
ஸதாத் என்பது, சத்தியத்தின் மீது சரியாக இருக்கும் விதத்தில், உறுதியாக இருப்பதற்கு அருள் புரியப்படுவதாகும். அதாவது, சொல், செயல், நம்பிக்கை என அனைத்திலும் நிலையான பாதையில் இருப்பதாகும்.
அர்த்தம் சார்ந்த அம்சங்கள், புலன் சார்ந்த அம்சங்கள் ஊடாகவே தெளிவாகப் புரியப்படுவதால், இந்த துஆவை நீங்கள் ஓதும் போது, (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக. நேர்வழிகாட்டலை நீ கேட்கும் போது, பயணத்தில் இருப்பவனுக்கு வழிகாட்டுவதை நினைவில் கொள்வாயாக! ஏனெனில், அவன் வழிதவறிப் போய்விடக் கூடாது என்ற பயத்தில், வலப்பக்கமோ, இடப்பக்கமோ திரும்பாமல் நேராகவே செல்வான். அப்போது தான், ஈடேற்றமாக, தனது இலக்கைத் துரிதமாக அடைந்துகொள்ளலாம்.
நேர்த்தி என்பதன் மூலம், அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக. அம்பை நேராக நிமிர்த்தி வைக்கும் போது, அது வேகமாகச் சென்று, இலக்கை அடைவதை நீ காண்பாய். எறிபவன் ஒரு இலக்கை நாடினால், அந்த இலக்கை நோக்கி, அம்பை நேராக எறிவான். அவ்வாறு தான் அல்லாஹ்விடம் அந்த நேர்த்தியை ஓர் அம்பின் வடிவில் எண்ணிக் கேளுங்கள். எனவே, நீங்கள் உங்களது பிரார்த்தனை, நேர்வழி எனும் இலக்கையும், நேர்த்தியின் தீர்ச்சையையும் அடைவதைக் கேட்பதாக அமையும்.
நீங்கள் அல்லாஹ்விடம் நேர்த்தியைக் கேட்கும் போது, இந்த அர்த்தத்தை உள்ளத்தால் எண்ணிக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் கேட்பது, எறிவதற்காக நீங்கள் பயன்படுத்தும் ஈட்டியைப் போல இருக்கும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பிரார்த்திப்பவர், தனது அமல்களை, ஸுன்னாவைப் பின்பற்றுதனூடாகவும், உளத்தூய்மையைப் பேணுவதன் ஊடாகவும் நேர்த்தியானவும், சீராகவும் வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும்.
  2. ஆழமான அர்த்தத்தை உள்ளடக்கியுள்ள இந்த துஆவை, அருளையும், நேர்த்தியையும் பெற்றுக்கொள்வதற்காகக் கேட்கவேண்டும்.
  3. ஓர் அடியான் தனது அனைத்து விவகாரங்களிலும், அல்லாஹ்விடம் உதவி கேட்கவேண்டும்.
  4. கற்பித்தல் சந்தர்ப்பங்களில் உதாரணம் கூறல்.
  5. நேர்வழி, நிலைமை சீராக இருத்தல், சற்றும் வழிதவறாமல் நிலையாக இருத்தல், மறுமை சீராக இருத்தல் போன்றவற்றை ஒன்றாகக் கேட்டுப் பிரார்த்தித்தல். 'நேர்வழிப்படுத்துவாயாக!' என்று கேட்பதன் அர்த்தம், நேர்வழிப் பாதையிலேயே செல்பவனாக இருக்கவேண்டும் என்று கேட்பதாகும். 'நேர்த்தியாக வைப்பாயாக' என்பதன் அர்த்தம், அடைந்துகொண்ட சத்தியத்தில் இருந்து விலகிச் செல்லாமல் பாதுகாத்து வைப்பாயாக என்று கேட்பதாகும்.
  6. பிரார்த்திப்பவர் தனது பிரார்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்தி, அப்பிரார்த்தனைகளிள் அர்த்தங்களையும் மனக்கண் முன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية الموري Малагашӣ Урумӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு